பக்கம்:பாரதித் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணப்பம்

101


குறிப்பு: -இவ்விண்ணப்பம் மறுமுறையும் 28 பிப்ரவரி 1906-ல் 'ஒர் சுதேசீய விண்ணப்பம்' என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. தேசபக்திப் பாடல்கள் வேண்டும் என்கிற ஆவலை இது வெளிப்படுத்துகிறது. பிறரிடம் சிறந்த தேசீய கீதங்கலை எதிர்பார்த்துப் பாரதியார் ஏமாற்ற மடைந்திருக்க வேண்டும். இத்துறையில் சிறந்த பாடல்கள் இல்லாத குறையை அவர் அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளி லேயே தமது பாடல்களால் முற்றிலும் களைந்துவிட்டார். பாரதியார் இயற்றிய சுதேச கீதங்கள் என்ற நூல் 1908-ல் வெளியாகியது. வங்க வாழ்த்துக் கவியின் மூலமும் அடுத்து வரும் வந்தேமாதரம் முதலிய பாடல்கள் மூலமும் பாரதி யார் இப்பணியை 1905-லிருந்தே தொடங்கி விட்டார் என்பதை நாம் அறிகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/100&oldid=1539868" இலிருந்து மீள்விக்கப்பட்டது