பக்கம்:பாரதித் தமிழ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுப் பேய் 183

பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்பு களைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை கிடையாது.

எதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தே சித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக்கொண் டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையி லிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.

“ஹா, றொ, ஹா! எனக்கா விபூதி போட வந்தாய்? சும்மா இரு. அப்படியே கண்ணே மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வ்ா, அப்படியே உட்காரு, உனக் கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லா ருக்கும் விபூதி போடுகிறேன். தென் ஆப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினப்பள்ளி பண்டார, டாக்டர் கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன். ‘ எனருள.

எலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

‘அழாதே, கோழையே, போ, வெளியே போ’ என்றாள் காந்திம

எலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட் டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.

“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித் தாள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/182&oldid=605468" இலிருந்து மீள்விக்கப்பட்டது