பக்கம்:பாரதித் தமிழ்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ ரவீந்திர திக் விஜயம் 513

ஜெர்மனியிலே, இவருடைய அறுபதாம் வருஷக் கொண்டாட்டம் சில தினங்களின் முன்பு கொண் டாடப்பட்டது. அப்போது (பி) பெர்ன்ஸ்தாப் (எப்) முதலிய மஹா பிரமுகர்கள் கூடி ஒரு ஸ்மி சமைத்துக்கொண்டு, இக்காலத்தில் .ெ ஜ ர் ம ன் பாஷையில் எழுதப்பட்டிருக்கும் மிக முக்யமான காவ்யங்களும், சாஸ்த்ர க்ரந்தங்களும், பிற நூல் களும் அடங்கிய மிக விலையுயர்ந்த புஸ்தகத் தொகுதி யொன்று டாகுருக்கு ஸம்மானம் செய்தார்கள்.

ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத் ரவீந்த்ரராகிய நவீந்த்ர ருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக் குச் சேரமாட்டா. பாரதமாதாவின் பாத கமலங் களுக்கே சேரும். ஜெர்மனியில் உபசாரம் நடந்த மாத்திரத்திலே, அதைப் பின்பற்றி மற்ற முக்யமான ஐரோப்பிய தேசங்களெல்லாம் அவருக்குப் பூஜை நடத்துமென்பது- சொல்லாமலே வி ள ங் கு ம். அங்ஙனமே நடத்தியுமிருக்கின்றன என்பதைக் கீழே நன்கு விவரணம் புரிவோம்.

1921-ம் வருஷம், மே மாஸம், 21-ந் தேதியன்று, “ஹம்புர் கெர் ஜெய்துங்க” என்ற பத்திரிகையில் ஒருவர் எழுதியிருக்கும் நிருபத்தில் ரீமான் டாகுரைப் பற்றிய பின்வரும் வசனங்கள் கவனிக்கத் தக்கன: “பூரீமான் ரவீந்த்ரநாத டாகுர் ஸ்பைக்குள் வந்து பிரவேசித்த மாத்திரத்தில் எங்கள் அறிவுக் கெட்டாத ஒரு சக்தி வந்து புகுந்தது போலிருந்தது. இந்த மனிதருடைய வாழ்க்கையில் ஒ ற் ைற கூrணமாவது இவர் எல்லையில்லாத ஜகத்துடன் லயப்பட்டு நில்லாத rணம் கிடையாதென்பது தெளிவாகப் புலப்பட்டது. அவருடைய ஆரம்ப வசனங்களே மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன.

பா. த.-33 Yå

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/512&oldid=605987" இலிருந்து மீள்விக்கப்பட்டது