பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அக்காள் சொல்லும் போதே இவ்வளவு அழகாக இருக்கே... இதை அந்த கெளசல்யா டீச்சரே சொன்னால் எப்படி இருக்கும்...? அதைவிட நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? - இப்படி ராமுத்தாய் அந்தக் காலத்தில் ஏங்குவாள். கெளசல்யா டீச்சர் சொன்ன யோசனைகளை வைத்தே சிதுை எத்தனையோ திட்டங்கள் போட்டாள்.... எட்டாவது நம்மூர்ல முடிச்ச உடனே பூனாவரத்தில் ஒன்பதாவது வகுப்பில் சேரனும் மூணு மைல் தூரம் தான். தினம் தினம் மதியச் சோறு கொண்டுட்டுப் போய் படிச்சிட்டு வந்திரலாம். புஸ்தகங்கள் ளாம் ஸ்காலர்ஷிப்லே கிடைத்துவிடும். அங்கே பத்தாவது முடிச்சிட்டு பதினோராவது வகுப்பு படிக்க கெளசல்யா டீச்சர் ஸ்கூலுக்குப் போகணும். பத்திலே நிறைய மார்க் வாங்கிட்டால் இலவச ஆஸ்டல்லே அந்த டீச்சர் இடம் வாங்கிக் குடுத்திடறேன்னு சொல்லியிருக்காங்க... அங்கேயும் ஸ்காலர்ஷிப்லே புஸ்தகங்கள் நோட்டுக்கள்ளாம் கெடச்சிரும்... காவேஜ்லேயும் ஸ்காலர்ஷிப் வாங்கியே படிச்சிரலாம். முதல்லே சேரும் போது ஐநூறு ரூபாய் செலவாகுமாம். அதை மட்டும் ஐயா குடுத்திட்டாப் போதுமாம். அப்புறம் அவங்கள மாதரியே பி.எட். டிச்சராக வந்திரலாம். அந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க... ரொம்ப பிரியமாக இருப்பாங்க... ஐயாவாலே பணம் கடன் வாங்க முடியாட்டக் கூட அவங்களே எல்லா உதவிகளையும் செய்திருவாங்க... அப்படி ஒரு நல்ல மனசு கெளசல்யா டீச்சருக்கு...? -இப்படி சீதை கனவுகளாக கண்டுக்கிட்டிருந்தாள். அவள் கனவுகளை ராமுத்தாயிடம் சொல்லி அவளையும் துணைக்கு அழைத்துக் கொள்வாள். கனவுகள் காணும் அக்காள் சீதை இல்லாமல் நூறு பிள்ளை களோடு இடிச்சு நெருக்கிக்கிட்டு தீப்பெட்டி ஆபீஸ் பஸ்ஸிலே போனாலும் ஏதோ தனியாக தீஞ்சு போன காட்டிலே போகிற மாதிரி ராமுத்தாய்க்கு இருந்தது. தீப்பெட்டி ஆபீஸில் வேலை செய்யறதும் வெருக்கு வெருக்குன்னு இருந்தது. 憩 ☆ ፳8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/79&oldid=463985" இலிருந்து மீள்விக்கப்பட்டது