பக்கம்:பாரதித் தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

27


படுவதுமான உள்ளுணர்ச்சியையே பாரதியார் தமது பத்தாவது வயதில் கொண்டிருந்தார் என்று நான் கருதவில்லை.

பத்து வயதுப் பாலகனுக்கு ஒத்த வயதினருடைய சேர்க்கையிலே எத்தனையோ ஆசையிருப்பது இயல்பு. அப்படிப்பட்ட தோழமை கிடைக்காது வருந்திய பாரதியாருக்குத் தற்செயலாக அந்தப் பெண்ணின் தோழமை கிடைத்தது. அன்புணர்ச்சியை யெல்லாம் வெளியிட அவளே தனிப் பாத்திரமாக அமைகிறாள். அந்த ஆழ்ந்த அன்பைக் காதலென்றே கூறத் தோன்றுகிறது கவிஞருக்கு. சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து அதாவது 1910-ல் ஸ்வசரிதை எழுதும்போது இந்தத் தோழமை ஒரு பெரிய இன்பக்கனவாகத் தோன்றியிருக்கவேண்டும். லட்சியத் தெய்விகக் காதலாகவும் தோன்றியிருக்கவேண்டும். அவையே இத்தோழமையைக் காதல் என்று கூறத் தூண்டியிருக்க வேண்டும்.

பாரதியார் பிற்காலத்தில் இந்தக் காதலை நினைத்து ஏங்கிஞ்ரென்று கூறுவதற்கில்லை. ஸ்வசரிதையில் தவிர வேறு எங்கும் இதைப்பற்றி அவர் குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. 1905-ல் காசியில் நடைபெற்ற காங்கிரசுக்குப் பாரதியார் சென்றிருந்த தாகத் திருமதி செல்லம்மா பாரதி எழுதியுள்ளார்கள். அது சமயம் டம்டம் என்னும் ஊரிலிருந்த சகோதரி நிவேதிதா தேவியாரை அவர் சென்று தரிசிக்கிரு.ர். அந்த அம்மையாரின் உபதேசத்திலே பாரதியாரின் உள்ளம் லயித்து விடுகிறது. அவருடைய உள்ளத்திலிருந்த கலக்கமெல்லாம் அம்மையாரின் தரிசனத்திலேயே அகன்று விடுகிறது. பாரதியார் அவரையே தமது குருவாக ஏற்றுக் கொள்ளுகிறார். அது முதல் அவருக்குப் பெண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/27&oldid=1539810" இலிருந்து மீள்விக்கப்பட்டது