பக்கம்:பாரதித் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(rh34)"பாரதித் தமிழ்")))(rule))

ஓங்கி வளரத் தொடங்கவே சர்க்கார் அவரைப் பலவந்தமாக இம் மாகாணத்தைவிட்டு வெளியேற்றியது.

லஜபதிராயைப் போற்றிப் பாரதியார் இந்தச் சமயத்திலே இரண்டு கவின்த்கள் இயற்றியிருக்கிறர். நாடு கடத்தப்பட்ட லஜபதி,

தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெரு நாட்டிற் கொண்டு விட்டங் கென்னையுடன் கொன்றாலு

மின்புறுவேன்

என்று கூறுவதாகவும்,

ஒரு மனிதன் தனைப்பற்றிப் பல நாடு கடத்தியவற் கூறுசெய்தல் அருமையிலை : எளிதினவர் புரிந்திட்டா

ரென்றிடினும் அந்த மேலோன் பெருமையை நன்கறிந் தவனைத் தெய்வமென

நெஞ்சினுளே பெட்பிற் பேணி வருமனித ரெண்ணற்றார் இவரையெலாம்

ஒட்டியெவர் வாழ்வ திங்கே ?

என்றும் உணர்ச்சி மிக்க வரிகள் பாரதியாருடைய வாக்கிலே அப்பொழுது பிறந்திருக்கின்றன.

சுதந்தரப் போராட்டத்திலே சூரத் காங்கிரஸ் மிக முக்கியமானது. 1906-ல் கல்கத்தாவில் நடை பெற்ற காங்கிரசிலேயே மிதவாதிகளுக்கும் தேசிய வாதிகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வெளிப் படையாகத் தோன்றலாயின. தா தா பா ய் நெளரோஜி தலைவராக இருந்ததால் அவர் இவ் வேறுபாடுகள் மேலோங்காதபடி தம்முடைய வசீகர சக்தியால் நிலைமையைச் சமாளித்துவிட்டார். ஆனல் அடுத்த ஆண்டு காங்கிரஸ் கூடுவதற்குள் வேறுபாடுகள் மிகவும் வலுவடைந்துவிட்டன. நாக புரியில் நடைபெற வேண்டிய காங்கிரசைச் சூரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/34&oldid=1539864" இலிருந்து மீள்விக்கப்பட்டது