பக்கம்:பாரதித் தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்க்கை வரலாறு 29

‘எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமை யையும் சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய பூரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை ஸ்மர்ப் பிக்கிறேன்.’

பாரதியார் தமது ஞான குருவைக் கீழ்க்கண்ட வாறு துதி செய்து பாடியும் இருக்கிரு.ர்.

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்

காயிலாய் அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிரு யெமதுயர் நீர்

டாம்பயிர்க்கு மழையா யிங்கு

பொருளுக்கு வழியறிரா வறிஞர்க்குப்

பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

பாரதியாரின் வாழ்க்கையிலே பக்தியென்பது அடிப்படையாக இருந்தமைக்கு இவ்வம்மையாரின் அருளுபதேசம் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந் திருக்கிறது.

பாரதியாருக்கு மணமாகின்ற காலத்திலேயே அவருடைய தந்தை சின்னசாமி அய்யரின் செல்வ நிலை சீர்கேடடையத் தொடங்கி விட்டதென்று கூறலாம்.

ஈங்கிதற்கிடை யெந்தை பெருந்துயர் எய்தி நின்றனன் தீய வறுமையான் ஓங்கிநின்ற பெருஞ் செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியி லிழந்தனன்

செல்வத்தையிழந்த தந்தை மனமுடைந்து தளர்வெய்தலானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/29&oldid=605639" இலிருந்து மீள்விக்கப்பட்டது