பக்கம்:பாரதித் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன்ம பூமி

1909-ல் ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாக மாக ஜன்மபூமி என்ற நூல் வெளியாயிற்று. அதன் முகவுரையிலே பாரதியார் தேசபக்தி என்னும் புதிய மார்க்கத்தால் உள்ளக் கிளர்ச்சி பெற்றுத் தாம் அப்பாடல்களைப் பாடியதாகக் கூறுகிறார். மேலும் அவர் எழுதுவதாவது: “சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். நான் எதிர்பாராத வண்ணமாக மெய்த் தொண் டர்கள் பலர் இம்மலர்கள் நல்லன என்று பாராட்டி மகிழ்ச்சி யறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனகி, மறுபடியும் தாயின் பத மலர்க்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக் கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சி யளிக்குமென்றே நினைக்கின்றேன். குழ வினிது யாழினி தென்பர் தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்’ என்பது வேத மாதலின்.”

இந்நூலில் இடம் பெற்றிருந்த பாடல் đ95 GIFTGRI GŐT :

1. ஜாதீய கீதம் (வந்தே மாதர கீதத்தின் முதல்

மொழிபெயர்ப்பு.) 2. ஜய பாரத! 3. பாரதேவியின் திருத்தசாங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/126&oldid=605381" இலிருந்து மீள்விக்கப்பட்டது