பக்கம்:பாரதித் தமிழ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுச்சேரியில் புயற்காற்று 229

குறிப்பு:-இந்தக் கடுமையான புயற்காற்றைப் பற்றி கவிச் ச்க் கர்வர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம் என்னும் நூலில் திரு. ஆக்கூர் அனந்தாச்சாரி அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதியுள்னார் :

ஒர் நாளிரவு முழுதும் பாண்டியில் கடும் புயலும் மழையும் மாறி மாறி அடித்தன. வெள்ளைக்காரத் தெருவில் பாபு அரவிந்த கோஷாம், ஈசுவரன் தர்ம ராஜா கோவில் தெருவிலுள்ள வீடொன்றில் பூரீமான் பாரதியாரும், மற்றாென்றில் வ. வெ. சு. அய்யரும் குடியிருந்தனர். ஏறக்குறைய எல்லா வீடுகளும் புயலுக்கும் மழைக்கும் சரணுகதி யடைந்து தரையோடு தரையாய்ப் போயின. ஜனங்கள் மழை குளிர் இவற்றால் நடு நடுங்கிப் போயினர். வ. வெ. சு. அய்யர் வீட்டில் முழங்கால் வரை ஜலம். தமது குழந்தைகளைத் தோளின்மேல் சுமந்து நின்றவண்ண மாக இரவெல்லாம் இருந்தார். பாரதியார் அதற்கு முந்தின நாள் குடியிருந்த வீடு திடீரென்று விழுந்தது. ஆனல் அன்று புதிதாய்க் குடி புகுந்த வீடோ அப் பெரும் புயல் மழை இவற்றை லசுகியம் செய்யாமல் ஒருவாறு தாங்கியது. ஆனல் நெற் குவியல் மாத்திரம் நனைந்துவிட்டது. பாரதியார் வீட்டுக் கண்ணுடி ஜன்னல்களைச் சுவரில் ஒயாமல் மோத வைப்பதே காற்றின் வேலையாயிருந்தது. கண்ணுடி உடைந்து தூள் படுத்திருக்கும் அவரது குழந்தைகள் மீது விழுந்தது. அப்போது அவை களுக்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாதெனப் பராசக்தியைப் பிரார்த்தித்தார். இச் சம்பவத் தால்,

“காற்றடிக்குது கடல் குமுறுது முதல் ‘தீனக் குழந்தைகள் துன்பப்படா திங்கு தேவியருள் செய்ய வேண்டுகின்றாேம்.” வரை உள்ளதோர் ஸ்வாரஸ்யமான கீதம் பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/228&oldid=605538" இலிருந்து மீள்விக்கப்பட்டது