பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்ஸ், கம்யூனிஸ்ட், லெனின், விவசாயி, ஸ்டாலின், தொழிலாளி, நான் தேவனே, முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இராதே நீ செல்லும் பொழுது தயவு கூர்ந்து தூயோன் காந்தியை, துயோன் போப்பாலை அழைத்துச் சென்றுவிடு. பண வெறிபிடித்த இந்த உலகத்தில் பொறுமைக்கு, கருணைக்கு, அறநெறிக்கு இடமில்லை. ஆதலின் அஹிம்சாமூர்த்தி காந்தியை யும், கருணாமூர்த்தி போப்பாலையும் அழைத்துச் சென்றுவிடு. வர்க்கப் புரட்சி தான் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வினை உடைத் தெறியும். உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி மார்க்ஸ். நாளைய உலகம் உழைப்போர் உலகம். மக்கள் புரட்சிதான் சமுதாயத்தில் மாற்றத்தை மறுமலர்ச்சியை உருவாக்க இயலும் என்ற எண்ணங் கொண்டவன் ஹியூஸ். மக்கள் சக்தி ஒன்று திரண்டு உருவானால்தான் புரட்சி வெடிக்கும். பொது உடமைச் சமுதாயம் மலரும். மக்கள் சக்தியைக் கவிஞன் வரவேற் கின்றான்: அச்சமற்ற மக்கள் சக்தியே வருக! இரும்பு, எஃகு, தங்கச் சுரங்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த மனிதனுக்கு எதிராக உன் கரங்களை உயர்த்திடு. ஆயிரம் ஆண்டுகளாக உன்னை அடிமையாக விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் இந்த மனிதனுக்கு எதிராக - உன் கரங்களை உயர்த்திடு. அச்சமற்ற மக்கள் சக்தியே வருக! அவன் அங்கங்களை நொறுக்கி தவிடு பொடியாக்கு அவன் குரல்வளையைக் கிழித்தெறி - இன்றே இந்த ஆண்டே அவன் வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்டு. 150