பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு கவிதைகள் ஆறு கவிஞர்கள் நெருங்குவது நெருங்காதிருப்பதன் விளைவு நெருங்கியிருக்கிறோம் என்று நினைப்பது ஒரொரு சமயம் பின்வாசல் வழி கற்பனை வந்து உண்மையைச் சொல்லிப் போகும் நாம் நெருங்கியதில்லை அவரவர் இருப்பில் அவரவர் இருக்க நெருங்குவதெப்படி? இருப்பை நீத்து நெருங்குவ தென்றால் அவரவர் என்பதில்லாமல் யார் யார் நெருங்கியது? நெருங்கியவர் இல்லாது நெருக்கம் என்ன, நாம் நெருங்கியதில்லை -அபி. Δ சொல்லாதிருத்தலும் எளிது சொல்வதற்கென்று ஒன்று சொல்லும் போது கமழும் சில நாள் கழித்து - தெருவில் போவோரைப் பரட்டையாய் வழிமறிக்கும் பணியிரவில் ஊர்நெடுகப் புலம்பி உறங்கும் எப்பொழுதும் எதன் ஒரத்திலும் நின்று ஒட்டுக் கேட்கும். கூர்ந்து விழும் பார்வைகளை நழுவி திடுக்கிட இல்லாததாகும் இருத்தலின் நிறைவு என பேசப்படுவதில் சிக்காமல் பின்னல்களைப் போட்டு விட்டுப் போகும் I5?