பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கலம், அன்னவாசல் முதலியவை அடங்குவனவாம். கானாட்டில் ஆலங்குடி, திருமெய்யம், விராச்சிலை, காளையார் கோவில் முதலியன அடங்குவனவாம். புதுக்கோட்டையை ஆண்ட அரசமரபினர்கள் ஆதியில் தொண்டை மண்டலத்திலிருந்து வந்ததால் தொண்டைமான் என்று தம் பெயரில் சேர்த்துக் கொண்டுள்ளனர். யானையை அடக்குவதில் வல்லவர்களான தொண்டை மண்டலத்துக் கள்ளர் மரபினர் முதலில் திருச்சிக்கு அடுத்த அன்பிலில் வந்து குடியேறினார்கள். சோழ அரசனின் பிரதிநிதியாக ஆண்டிருக்கிறார்கள். அங்கிருந்து புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்தார்கள். அன்பிலில் இருந்து கள்ளரில் ஒரு பிரிவு அறந்தாங்கியில் குடியேறியது. இந்த அறந்தாங்கித் தொண்டமான்கள் 15ஆம் நூற்றாண்டில் வெங்கடாசலப் பல்லவராயர் தொடங்கி பொன்னமரா வதியைச் செல்வாக்குடன் ஆண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுள் 50 ஆண்டு காலம் புகழோடு ஆண்ட பொன்னம்பலத் தொண்டமான் குறிப்பிடத்தக்கவர். - இன்னொரு பிரிவு வைத்துார் வந்து பெருங்களூரில் தங்கி பல்லவ ராயர் என்றும் பல்லவராயத் தொண்டமான் என்றும் பெயர்கொண்டு 14 முதல் 17 ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்தவர்கள். இவர்களே புதுக்கோட்டையைப் புகழுடன், வெள்ளையர் ஆதிக்கம் வருமுன், ஆண்ட பரம்பரையினர். பிரிடீசாரின் ஆளுகையில் தனியரசு ஆண்ட ராயத் தொண்டமான்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. முன்னவர் பல்லவராயத் தொண்டமான்கள், பின்னவர் ராயத் தொண்டமான்கள். வைத்துர்ப் பல்லவராயர்கள் பெருங்களூரிலிருந்து முன்னேறி, கவினாடு, குளவாய்ப்பட்டி இங்கெல்லாம் குடியேறி, குடுமியர் மலைக்குப் பரவினார்கள். பின்னர் கலசமங்கலம், சிங்கமங்கலம் என்ற இரண்டு சிறு கிராமங்கள் இருந்த இடத்தில் கோட்டை ஒன்று புதிதாகக் கட்டினார்கள். அதுவே புதுக்கோட்டை எனப் பெயர் பெற்று தலைநகரமாயிற்று. (மானாமதுரைக்கருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையினின்றும் வேறுபடுத்திக்காட்ட இவ்வூரைத் தொண்டமான் புதுக்கோட்டை என்பர்). புதுக்கோட்டையை நிறுவிய வைத்துர்ப் பல்லவராயரின் முன்னோன் ஒரு சேர்வை என்று நெல்சனைச் சான்று காட்டி II3