பக்கம்:பாரதித் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16


பெயர்த்தார்கள். அவற்றின் தொகுப்பு நூல்களும் எப்படியோ என்னிடமிருந்து மறைந்து போயின.

நெல்லையப்பர் ஒரு தங்கமான மனிதர். பாரதியாரிடத்திலே பேரன்பு பூண்டவர்களில் ஒருவர். இவரைப் போலவே பாரதியாரை நேரில் அறிந்த ஒரு சிலர் நம்முடன் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் விசாரித்து வாழ்க்கை விவரங்கள் பலவும் தயாரிக்க வேண்டும்.

இவற்றில் சிலவற்றைத்தான் நான் ஓரளவு முடிந்தது. பாரதியாரின் இலக்கிய வளர்ச்சியைக் காலக்கிரமத்தில் ஆராய்வதை நான் முக்கியமாக இந்நூலில் கொண்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாக இல்லாமற்போனாலும் ஒருவாறு கால நிர்ணயத்தோடு எழுத முயன்றிருக்கிறேன். பாரதியாரின் நூல்களுக்கு ஆங்காங்கே குறிப்பாகத் திறனாய்வும் கண்டிருக்கிறேன். இன்னும் விரிவான முறையில் இந்த ஆராய்ச்சியைச் செய்ய பாரதியன்பர்களும், தமிழன்பர்களும் வருங்காலத்திலே முன்வருவார்களென்று நம்புகிறேன். அவ்வாறு செய்தால் அது தமிழ் நாட்டிற்கு ஒரு புது விழிப்பையும், தமிழுக்கு ஒரு புதிய சக்தியையும் ஊட்டிய பாரதியாருக்குச் செய்யும் சிறந்த சேவை என்பதோடு தமிழுக்கும் சிறந்த சேவையாகும் என்று நான் கருதுகிறேன்.

:-பெ. தூரன்.


இரண்டாம் பதிப்பின் முன்னுரை


புதிய விவரங்கள் பல இப் பதிப்பிலே இடம் பெறுகின்றன. அநேகமாக பாரதியாருடைய இலக்கியப் படைப்பு எல்லாவற்றைப் பற்றியும் குறிப்புகளை இதிற் காணலாம். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் திருத்திச் சற்று விரிவாக எழுதியுள்ளேன். இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள காலவரிசைக் குறிப்பு ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். இப்பதிப்பு அளவில் மிகப் பெரிதாகிவிட்டமையால் தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகளின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பெற்றுள்ளது.

சென்னை,7-3-1903.}

பெ. தூரன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/15&oldid=1539837" இலிருந்து மீள்விக்கப்பட்டது