பக்கம்:பாரதித் தமிழ்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோடி ரூபாய் 5II

கண்ணபெருமான் பகவத் கீதையில் சொல்லியிருப்ப தற்கு இக்காலத்தில் பல ர் பொருளுணர்ந்து கொள்ள மாட்டாதவர்களாக இருக்கின்றனர்.

பயனே மனிதருக்குக் கிடைக்காத நிலைமையில் தொழில் புரிய வேண்டுமென்பது கீதையில் சொல்லப் பட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். அந்த அர்த் தத்தில் பகவான் அந்த வசனத்தை வழங்கவில்லை என்பது கீதை முற்றிலும் வாசித்துப் பார்த்தவர் களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.

தொழில் புரிந்துவிட்டு வெற்றி அகப்படுமோ அகப்படாதோ என்று எவரும் மனம் புழுங்குதல் வேண்டா. பயனுடைய தொழிலென்று புத்தியாலே நிச்சயிக்கப்பட்ட தொழிலே, ஒருவேளே அது பயன் தராதோ என்ற பேதை ஸம்சயத்தால் நாம் நிறுத்தி வைத்தல் தகாது. தொழிலுக்குப் பயன் நிச்சயமாக உண்டு. கடவுள் பின்ைெரு பகுதியிலே சொல்லுகிறார்:-"பார்த்தா, தொழிலுக்கு வெற்றி இந்த உலகத்தில் மிகவும் விரைவாகவே எய்தப் படும்” என்று. தவிரவும், “மகனே, நற்றாெழில் புரிந்த எவனும் இவ்வுலகத்தில் தீ நெறி எய்துவ தில்லை’ என்று பின்னே கடவுள் மற்றாே.ரிடத்தில் விளக்கியிருக்கிரு.ர்.

எனவே, வெற்றியைக் கடவுளின் ஆணையாகக் கண்டு, பயனைப்பற்றி யோசனையே புரியாமல், நம்மவர் ஸ்வராஜ்யத்துக்குரிய தொழில்களை இடை விடாமல் செய்துகொண்டு வரக் கடவர்.

அதனை உடனே தொடங்கவும் கடவர். அதில் திரிகரணங்களை மீட்சியின்றி வீழ்த்தி விடவும் கடவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/510&oldid=605984" இலிருந்து மீள்விக்கப்பட்டது