பக்கம்:பாரதித் தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல்லாஸ சபை

169


வில்லை. இன்று நடப்பது ஆருவது அல்லது ஏழாவது கூட்டமென்று நினைக்கிறேன். இவர் இத்தனை அஜாக்கிரதையுடன் நமது சபையாருக்கு வாக்குத் தவறியது பற்றி இவரை நீக்கிவிட வேண்டுமென்று சொல்லுகிறேன்.

காளிதாஸன் : சபையார் என்னை மன்னிக்க வேண்டும். நமது சபை விவகாரங்கள் ரஸ்மாக இருக்கும் சமயங்களில் பத்திரிகைக்கு எழுதலாம். அப்படி விசேஷமொன்றும் சென்ற கூட்டங்களில் நடக்கவில்லை. ஆகையால் எழுதவில்லை.

எலிக்குஞ்சு செட்டியார் : ரஸம், ரஸமில்லை. அதெல்லாம் நீர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சபையில் நடக்கும் விஷயங்களை நீர் அப்படியே எழுதிவிட வேண்டும். பத்திரிகைக்காரர் போடா விட்டால் நீர் ஜவாப்தாரி இல்லை.

(இங்ஙனம் சிறிது நேரம் வாதங்கள் நடந்த பின் கடைசியாக சபையார் செய்த் முடிவு-காளி தாஸரை நீக்கிவிட வேண்டுமென்று செட்டியார் சொல்லியது பிழை. சபையில் என்ன நடந்த போதி அலும் அதை அப்படியே காளிதாஸர் பத்திரிகைக்கு எழுதி விடவேண்டும். கொஞ்சங்கூட ரசமில்லாத வார்த்தைகள் ஒரு கூட்டத்தில் பேசப்பட்டதாகக் காளிதாஸருக்குத் தோன்றுமானல் அவர் சபையா ரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு எழுதாமலிருக் கலாம்.)

குமாரசாமி வாத்தியார் : மேலே விசாரணைகள் செய்வோம்.

குண்டு ராயர் : பெல்ஜியம் தேசத்திலே எமீல் வெர் ஹேரன் (Emile Verhaeren) என்று ஒரு கவி இருக்கிறார். அவருடைய கவிதை புது வழியாக இருக்கிறதென்று ஒரு பத்திரிகையில் வாசித்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/168&oldid=1539926" இலிருந்து மீள்விக்கப்பட்டது