பக்கம்:பாரதித் தமிழ்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்கூன் ஸர்வகலா லங்க பஹறிஷ்காரம்

சக்திதாஸன்

18 ஜனவரி 1921 ரெளத்திரி தை 6

ரங்கூன் ஸர்வகலா ஸங்கத்தையும், ராஜாங்க உதவி பெற்ற மற்றப் பாடசாலைகளையும், மானக் கர் பஹறிஷ்காரம் செய்யும்படி நேர்ந்த விருத்தாந்தங் களைக் குறித்து, மிஸ்டர் மோங் தின் மோங் விடுத் திருக்கும் அறிக்கையை நோக்குமிடத்தே, ஸர்க்கார் அறிக்கை பrபாதமுட்ைய தென்பது வெளிப்படு கிறது. ரங்கூன் ஸ்ர்வகலா ஸங்கத்தின் நிர்மாண நிபந்தனைகள் ஆக்ஷேபத்துக் கிடமானவையென்று ஜனங்கள் கூக்குரலிட்டதை அதிகாரிகள் சிறிதேனும் பொருட் படுத்தாமல் நிராகரித்துவிட்டு, அந்த நிர்மாணத்தை மிதமிஞ்சிய விரைவுடன் சட்டமாக் கினர்கள்

இந்த விஷயத்தில் பர்மிய அறிவாளிகள் செலுத்திய ஆத்திரத்தை அதிகாரிகள் கவனிக்கவே யில்லை. இவ்வித அசிரத்தையை பர்மிய அறிவாளி கள் முன்னைப்போல, ஆட்டுக் குட்டித்தனமாகப் பொறுத்துக் கொண்டிருப்பார்களென்று, “ஆகாசத் திலிருந்து நேராக இறங்கி வந்த ஆங்கிலேய அதி காரிகள் தீர்மானம் செய்து கொண்டனர். ஜெர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/415&oldid=605835" இலிருந்து மீள்விக்கப்பட்டது