பக்கம்:பாரதித் தமிழ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருதலை

காளிதாஸன்

26 (3in 1917 பிங்கள வைகாசி 13

திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற மூன்று புருஷார்த்தங்களையும் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளுக்குள் பாடிக் காட்டிய றமையைக் கண்டு வியந்து சிலர் ஒளவையாரிடம் சொன்னர்களாம். ஒளவையார் நான்கு புருஷார்த் தங்களையும் ஒரே வெண்பாவுக்குள் பாடிக் காட்டினுளாம்.

ஈதல்அறம்: தீவினை விட்டிட்டல் பொருள் எஞ் காதலிருவர் கருத்தொருமித்-தாதரவு (ஞான்றும் பட்டதே யின்பம், பரனேநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.

கொடுப்பது தருமம்.

பாட்டைக் கொடுத்தாலும் சரி; நாட்டைக் கொடுத்தாலும் சரி, பணம், கல்வி, மருந்து, தைரி யம், ஏதேனுமொரு நல்ல பொருளை உடையவன் வேண்டியவனுக்குக் கொடுத்தால் அஃதறம். உலகத் தில் ஸாமான்ய மனிதனைச் சூழ்ந்து மிக்கோர், ஸ்மானஸ்தர், தாழ்ந்தோர் என மனிதர் மூன்று வகையாகக் காணப்படுகிறார்கள். இந்த மூன்று

திறத்தாருக்கும் அவன் கொடுக்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/265&oldid=605595" இலிருந்து மீள்விக்கப்பட்டது