பக்கம்:பாரதித் தமிழ்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பாரதி தமிழ்

வர்ணிப்பேன்? நான் சித்திரமெழுதிப் பழகாதது பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். ஹா. ஹிந்துஸ் தானத்து ஏழை, பரதேசி, பண்டாரம், யோகி, பிச்சைக்கார வகுப்புக்களில் சில அற்புதமான முகங்கள், எத்தனையோ அற்புதமான முகங்கள் நாள்தோறும் என் கண்ணில் படுகின்றன. அள விறந்த துயரத்தாலோ, கஷ்டங்களாலோ, தவத் தாலோ, யோக சித்தங்களாலோ இவர்களிலே பல் லோர் அழுக்குப் படிந்த தேவ விக்ரகங்களின் முகங் களை யுடையோராக விளங்குகின்றனர். அதை யெல்லாம் பார்த்தெழுதி வைக்க எனக்குச் சித்திரத் திறமையில்லை. புகைப் படம் பிடித்து வைக்க ‘ என்று யோசனை பண்ணுகிறேன். இது

றக.

மேற்படி குருடன் போட்ட சத்தத்தைத்தான் மேலே அப்ராக்ருதமென்றும் அஸாதாரணமென் றும் சொன்னேன். இந்த ஸம்ஸ்கிருத பதங்களின் பொருள் என்னவென்றால் அந்த மாதிரிச் சத்தம் நான் இதற்கு முன்பு கேட்டதே கிடையாது. ஆனல் அந்தக் குரல் எந்த ஜாதியென்பதைக் கூறமுடியும். கல்லுளி மங்கான், தெருப் புழுதியிலே உருண்டு உருண்டு, ஏழுமலையானென்று கூவிக் கையில் உண்டியல் செம்பு கொண்டு பணம் சேர்க்கும் ஏழுமலையாண்டி முதலியவர்களின் குரலைப் போன் றது. ஆனல் ஒரு மூன்று மாஸ்த்துப் பச்சைக் குழந்தையின் சத்தத்தைக் காட்டிலும், முப்பது வருஷத்துத் தேர்ச்சி கொண்ட கல்லுளி மங்கா னுடைய சத்தம் எத்தனை மடங்கு கடினமாக இருக்குமோ அத்தனை மடங்கு அந்தக் கல்லுளி மங்கானுடைய சத்தத்தைக் காட்டிலும் நமது கதா நாயகனகிய சந்தேகக் குருடனுடைய குரல் கடின மானது. எனவே 32 மூங்கிற் கழிகளைச் சேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/305&oldid=605664" இலிருந்து மீள்விக்கப்பட்டது