பக்கம்:பாரதித் தமிழ்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பாரதி தமிழ்

“நான்தான் வேப்பமரம்; நான்தான் கூப் பிட்டேன்; எழுந்திரு’ என்று மறுமொழி உண்டா யிற்று:

உடனே நான் யோசிக்கலானேன்:

“ஒஹோ, ஒஹோ! இது பேயோ, பிசாசோ, யrர், கிந்நரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதி யாரோ, வனதேவதைகளோ, யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்பமரம் எங்கேனும் பேசுவ துண்டோ? அட, போடா, பேயாவது: அதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை யன்றாே? நாம் உண்மையாகவே கண்ணை விழித்து ஜாக்ர நிலை யடையவில்லை. இன்னும் கனவு நிலையிலேதானிருக்கின்றாேம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனையொலி’-இங்ஙனம் நான் யோசனை செய்துகொண்டிருக்கையில், “ஏ மனிதா, % மனிதா, எழுந்திரு’ என்று மறுபடி சத்தமுண்டா

ADŲ)!.

“நீ யார்?’ என்று பின்னுங் கேட்டேன்.

“நான் வேப்பமரம். என் அடியிலேதான் நீ படுத்திருக்கிறாய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்’ என்று மறுமொழி வந்தது.

அப்போது நான்:-"சரி, நமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லி யிருக்கிரு.ர். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ் விஷயம் நமக்கு இதுவரை தெரியாமலிருக்கலாம். ஆதலால் இந்த மரத்துடன் ஸ்ம்பாஷணை செய்து விஷயத்தை உ ண ர் ந் து கொள்வோம்” என் றெண்ணிக் கண்ணைத் திறந்துகொண்டெழுந்து நின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/321&oldid=605689" இலிருந்து மீள்விக்கப்பட்டது