பக்கம்:குதிரைச் சவாரி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று கூறிக்கொண்டே மோஹனை அப்படியே அலாக்காகத் தூக்கினான் முனுசாமி. பக்கத்தில் நின்ற குதிரை மேல் உட்கார வைத்தான்.

அப்போது, ‘இந்தாப்பா முனுசாமி, இருபது காசு சவாரிக் கட்டணம்’ என்று இரு பத்துக் காசு நாணயத்தை முனுசாமியிடம் நீட்டினார் மோஹனின் அப்பா.

“துட்டா: எதற்காக ? மோஹனுக்கா நான் பணம் வாங்குவது ? நன்றாயிருக்கிறது...என் தங்கக் கட்டி மோஹனுக்கா நான் பணம் வாங்குவது ?” என்று முனுசாமி கூறிவிட்டு,

“ஹை, நம்முடைய ராஜா மேலே உட்கார்ந்திருக்கிறார், ஜோராய்ப் போ. உம்...” என்று ஒரு தட்டுத் தட்டினான், அந்தக் குதிரையை.

உடனே மோஹனைத் தூக்கிக்கொண்டு ‘ஜாம் ஜாம்’ எனறு நடந்தது அந்தக் குதிரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/30&oldid=496039" இலிருந்து மீள்விக்கப்பட்டது