பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

107


வைத்தியத்திற்காகவும் மருத்துவ குலத்தாருக்காகவும் செய்த தியாகங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். பின்னர் இசைப்புலவர் ஆர். வி. நாயுடு அவர்களால் யாழ், சுரகெத், சித்தரா, நீர்க் கிண்ணத்திசை (ஜலதரங்கம்) முதலிய இன்னிசைக் கருவிகள் வாசிக்கப்பட்டன.

- காரியதரிசி
இதழ் : குடியரசு - 5. 5. 1928
Petroi, Tank – ஆவி எண்ணெய்ப் பெட்டி

காரைக்குடிக்கும் தஞ்சாவூர்க்கும் ஓடிக்கொண்டிருக்கும் மோடார் பஸ் ஒன்றுக்குப் பெட்ரோல் டாங்கி (ஆவி எண்ணெய்ப் பெட்டி) ஓட்டையாய் ஓடும்போது ரோட்டெல்லாம் பெட்ரோல் சிந்திக்கொண்டே போகிறது. அதைக் கீழே சிந்தவொட்டாமல் ஒரு தொட்டியில் பிடித்துக் கொண்டு வண்டியின் பின்னால் தொடர்ந்து வர ஒர் ஆள் தேவை. சம்பளம் பிடிக்கும் பெட்ரோலில் பாதியைத் தரப்படும். இஷ்டமானவர்கள் தெரிவித்துக் கொள்ளவும். விலாசம், ஆசைக்கார அஞ்சப்பன், பாடாவதி பஸ் சர்வீஸ், காரியக்குடி.

இதழ் : ஆனந்த விஜய விகடன் (1928, ஜூன் தாய் - 1 பிள்ளை
4 பாக்கட் விகடங்கள், பக்கம் - 196
Weight - நிறுக்குங் கருவி

ரெயில்வே ஸ்டேஷன்களில் டிக்கட்டு வாங்கும் ஜன்னல்களுக்கு முன்னே ஒரு வெயிட் (நிறுக்குங் கருவி) ஒன்று பலகைபோல் போட்டு விட்டால் அதன் மேல் ஏறி நின்றுதான் டிக்கட்டு வாங்க நேரிடும். அப்படி ஆள் ஏறியவுடன், ஏறினவன் இத்தனை பவுண்டு எடையுள்ளவன் என்று டிக்கட்டு விற்பவர்களுக்கு ஒரு முள் காட்டிவிடும். ஒரு பவுண்டுக்கு ஒரு மைலுக்கு இவ்வளவு கட்டணம் என்று ஏற்படுத்தி எடையின் மீது டிக்கட்டு கொடுக்கும் படி ரெயில்வே கம்பெனியாரை விகடன் வேண்டுகிறான்.

நூல் : ஆனந்த விஜய விகடன் 1928 பிப்ரவரி) தாய் - 1,
பிள்ளை - 1, பக்கம் - 9
ஆசிரியர் : விகடகவி பூதூர். வைத்திய நாதையர்