பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

139


நூல் : சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை (1936) பக்கங்கள் -8, 9
நூலாசிரியர் : வித்வான் ம. பெரியசாமிப் பிள்ளை
பரிசம் - தொட்டால் அறிதல்

உயிர் என்பது யாது? நான் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது எதுவோ அதுவே உயிர். எனது உடல் என்பதனால் உடலினின்று வேறானது உயிர். ஓசை, ஒளி, மணம், சுவை, பரிசம் (தொட்டால் அறிதல்) ஆகிய ஐம்புலன்களையும் மனம் புத்தி இவற்றின் உதவியால் அறிகின்றது எதுவோ அதுவே உயிர்.

நூல் : பக்கம் 15
சப்தாலங்காரம் - சொல்லணி
அர்த்தாலங்காரம் - பொருளணி
உபமாலங்காரம் - உவமையணி
திருஷ்டாந்த அலங்காரம் - எடுத்துக்காட்டுவமையணி
அபூத உவமை - இல்பொருளுவமையணி
ரூபக அலங்காரம் - உருவக அணி
சந்தேக அலங்காரம் - ஐயவணி
வ்யதிரேக அலங்காரம் - வேற்றுமையணி
பிரதீப அலங்காரம் - எதிர்நிலையணி
பரிசுர அலங்காரம் - கருத்துடை அடைமொழியணி
ஸங்கர அலங்காரம் - கலவையணி
நூல் : சிற்றிலக்கண விளக்கம் (1936)
பக்கங்கள் : 200, 201, 202, 203, 204, 205, 206
நூலாசிரியர் : கா. நமச்சிவாய முதலியார்
Loudspeaker – ஒலிபெருக்குங் கருவி

திரு. பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியாரவர்கள் திருப்பணியாளர்கள் சார்பாகவும் சமாஜக் காரியதரிசி சமாஜத்தின் சார்பாகவும் தலைவர், சொற்பொழிவாளர் முதலிய அனைவருக்கும் நன்றி கூறினார்கள். தலைவர் அனைவர்க்கும் நன்றியும் வாழ்த்தும் கூறி முடிப்புரை பகர்ந்தார். இம் மகாநாட்டில்