பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கலீலியோவின்

கருவிகளைக் கையாலும் தீண்டேன், கண்ணாலும் பாரேன் என்று அடம் பிடித்து மமதையாகப் பேசி வசைகளை வாரி வீசினார்.

ஒரு பேராசிரியர் மனநிலேயே இவ்வாறு இருந்தது என்றால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அவ்வளவு பழமையும், அரிஸ்டாட்டில் வெறியும் அவர்கள் உள்ளத்திலே பாசிகளாகப் படர்ந்து விட்டன.

கலீலியோ கண்டுபிடித்துக் கூறுவது எல்லாம் உண்மைதான் என்று உணர்ந்தவர்கள் கூட, ஏதோ ஒன்றும் அறியாத உத்தமர்களைப் போல அவரைக் கேலிசெய்தார்கள்! கிண்டலடித்தார்கள்.

சந்திரனில் வரிசை வரிசையாக மலைகள் இருக்க முடியாது; ஏனென்றால், அது வழவழப்பானது. வட்டவடிவமானது. அப்படி இருப்பதாகக் கூறும் கலீலியோ மதியற்றவன்; தான்தான் மகா அறிவாளி என்று வாய்பறை அடித்துக்கொள்ளும் வம்பன்: வீணன் என்று; உண்மையை உணர மறுத்தவர்கள் பேசினார்கள்.

பகற்கனவு கண்டவன்போல பிதற்றுகிறானே கலீலியோ வாயில் வந்ததை எல்லாம் வாரித் தூற்றிக் கொண்டிருந்தால் நாங்கள் அந்த பதர்களை நம்ப வேண்டும் என்பது கட்டாயமா என்ன? என்று வீண்பேச்சு பேசும் சிலர் கலவரம் செய்தார்கள்.

வியாழனைச் சுற்றி பல நிலவுகளாம்! யாரிடத்திலே அளக்கிறான் கதையை இந்தக் கலீலியோ! பூமிக்கே ஒரே ஒரு சந்திரன் இருக்கும்போது, அது எப்படி வியாழன் மண்டலத்திலே மட்டும் நான்கு நிலாக்கள் நிலவ முடியும்? என்று கேட்டார்கள் வேறு சிலர்!

சூரியனாம்! சுற்றுகிறதாம்! மூன்று நிலாக்களுக்கு மட்டும் பதினேழு நாட்களாகின்றதாம் சுற்றிவர