பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

கேளாக் காதர்களும் - அதை, ஏலா இதயங்களும் - ஓலமிடும் ஓநாய்களைப் போல, கோல்’களைத் தூக்கிக் கொண்டார்கள் - பேரிகை கொட்டிட !

கோள் கூறும் புத்தி நீண்டால், பிறகு, எழுதுகோல் ஆடாதா என்ன? எதிர்வாதம் எழாதா என்ன?

'அடி இந்தி மூதேவி, நீ மத்திய ஆட்சி - அதிகாரங்களோடு ராணியைப் போல வேடமணிந்து தமிழகம் வருகிறாயே! நீ பொது மகளடி விலை மாதடி என்ற பொருள் பட, விளக்க விந்தைகளை விளைவித்தார் - அப்துர் ரகுமான்!

'இந்திராணி மட்டும் எல்லோர்க்கும் பொது மகளாம்!' என்ற வரியை, ஒரு முறைக்குப் பன்முறை, நிறமாலைக் கண்ணாடி கொண்டு காண்பதைப் போல, இந்தியின் இலக்கிய வெறி மேனியை அக்கக்காக அங்கப் பிரதட்சணம் செய்தார்!

மாநாட்டுக் கவியரங்கிலே பாடிய ஒரு கவிஞர், இப்படியெல்லாம் பாடலாமா என்று தோள் தட்டிட எவனுக்கும் உரிமை இல்லை!

ஏனென்றால், கடவுளையே சாபம் கொடுப்பவன் கவிஞன்! அவரையே அடா புடா என்று அலங்கார உயர்வு நவிற்சி அணிகளிலே ஏசுவான்!

கவிஞன் என்பவனுக்கு அத்தகைய ஒரு சிறப்பான பொயட்டிக்கல் லைசென்ஸ் உண்டு! புலமை ஞானம் அவனுக்கு வழங்கும் உரிமைப் பரிசு அது!

அத்தகைய ஒரு கவிஞனுக்கு - இந்த இந்திப் பெண் மட்டும் என்ன தாடகையா? இல்லை பூதகியா?

'இருபத்தைந்து ரூபாய் கொடுத்தால், இந்தி ராணியை தமிழர்கள் அரவணைப்பார்கள்' என்று, இந்தி ராணி பெற்ற விபூதி மிஸ்ரா நாடாளுமன்றத்தில் நாதட்டிப் பேசினாரே - ஏன், தெரியாதா உமக்கு?

அதனால்தான் அப்துர் ரகுமான், இந்தி ராணி நீ விலைமாது - பொது மகள் என்று அடித்தடித்து ஒரு முறைக்கு மும்முறை அறைகூவலிட்டுப் பாடினார் கவியரங்கில் - என்ன தப்பு அது?