பக்கம்:மதன கல்யாணி-3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169 இல்லை. மிகுதி இருக்கும் சாட்சிகள் எல்லோரும் எந்த விஷயத்தை ருஜூப்படுத்தப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட பிறகு, தேவையானால், நான் குறுக்கு விசாரணை செய்கிறேன். அதற்குக் கோர்ட்டார் தயை கூர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும். இதில் ஒரு கட்சியார் சகல ஆயுதங்களையும் தரித்துச் சண்டை செய்கிறார்கள்; இன்னொரு கட்சியாருக்குக் கை கால்கள் உடம்பு முதலிய சகலமான அங்கங்களும் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன என்று சொல்வது புனைந்துரைத்தல ஆகாது. இப்படி இரண்டு கட்சிக்காரர்கள் சண்டையிடுவது தருமயுத்தமாகாது. இவ்வாறு செய்யவும் சட்டம் இடங்கொடுக்கவே இல்லை. சட்டங்கள் எல்லாம் நீதியே வடிவெடுத்து வந்தபடி அமைக்கப்பட்டிருக் கின்றன. ஆகையால் ஜட்ஜி துரையவர்கள் இருதிறத்தாரையும் சம பலத்தோடு வைத்துக் கொண்டு இந்தப் பெயரை நடத்தி வைத்து, சட்டங்களின் கண்ணியத்துக்கு இழுக்குண்டாகாமல் காப்பாற்ற வேண்டும்" என்றார். அதைக் கேட்ட ஜடஜி, "சரி; குறுக்கு விசாரணை கடைசியில் ஆகட்டும். அடுத்த சாடசியை விசாரிப்போம்" என்றார். உடனே சேவகன், "டாக்டர் கேசவலு நாயுடு!" என்று மூன்று தரம் கூப்பிட, தொப்பி கால்சட்டை மேல்சட்டை பூட்ஸ் கைத்தடி முதலிய சின்னங்களோடு ஒருவர் உள்ளே வந்து கூண்டின் மேல் ஏறி நின்றார். உடனே அவரது விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையின் விவரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லு முன், நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தை விரித்துச் சொல்வது அவசியமாக இருக்கிறது. அந்த விசாரணை நடந்த போது கல்யாணியம்மாள் எங்கே இருந்தாள் என்ற சந்தேகம் நமது வாசகர்களின் மனதில் உண்டாகலாம் மகா பாக்கியவதியான அந்தச் சீமாட்டி, மைனர் கொலைக் குற்றத்திற்காக சிறைப்படுத்தப் பட்டிருக்கிறான் என்ற விபரீதமான செய்தியை மதனகோபால னிடத்தில் அறிந்து கொண்ட உடனே, சிவஞான முதலியாரது ஜாகைக்குப் போய், விஷயங்களை அவரிடத்தில் தெரிவித்து, அவரையும் அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், விவரங்களை அறிய முயன்றதும், அவ்விடத்தில் தங்களது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/173&oldid=853308" இலிருந்து மீள்விக்கப்பட்டது