பக்கம்:மதன கல்யாணி-3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மதன கல்யாணி பக்கத்தில் வக்கீல் சிவஞான முதலியாரும், மகா கீர்ததி வாய்ந்த பாரிஸ்டர் குரோட்டன் துரையும், இன்னும் மூன்று பிரபல பாரிஸ்டர் களும் வந்து உட்கார்ந்திருந்தனர். குற்றவாளிகள் நிறுத்தப்படும் கூண்டில் மைனரும், பாலாம்பாளும் வெட்கமும் துக்கமும் கவலையும் வடிவெடுத்து வந்தவர்கள் போல் நின்று கொண்டிருந் தனர். ஜனங்களுள போக்கிரிகளாக இருந்த சிலர் பாலாம்பாளையும் மைனரையும் பார்த்துப் புரளி செய்து கொண்டிருந்தனா. மற்றும் சிலர் அவளது அற்புதமான அழகைக் கண்டு மோகமுற்றனா. வேறு சிலர் அவர்களது பரிதாபகரமான நிலைமையைக் கணடு இரங்கினர். ஆகவே அவர்கள் வெட்கித் தலைகுனிந்து நின்றனா. அப்போது, சரியாகப் பதினொரு மணிக்கு ஜட்ஜி துரை வந்து சேர்ந்தார்; வந்தவுடனே மைனரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சர்க்கார் வக்கீல் அந்த வழக்கினது சாராம்சத்தை மிகவும் சுருக்க மாக எடுத்துச் சொல்லத் தொடங்கி, "நியாயாதிபதிகளே! ஜூரிப் பிரபுக்களே! நீங்கள் இதுவரையில் எத்தனையோ வேடிக்கையான வழக்குகளை விசாரித்திருப்பீர்கள். இருந்தாலும், இதைப் போன்ற அவ்வளவு விநோதமான வழக்கை இதுவரையில் காதாலும் கேட்டிருக்க மாட்டீர்கள். இதில் சில வேடிக்கையான ரகசியங்கள் வெளியாகப் போகின்றன. ஆகையால், இன்றைய தினம் உங்களுக்கு நல்ல தமாஷான பொழுது போககு ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பொருட்டு நீங்கள எல்லோரும், மகா திறமை வாய்ந்த நமது மைலாப்பூா சப் இன்ஸ் பெக்டருக்கு நன்றி செலுத்துவீர்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லக்கூடும்; இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக வந்திருக்கும யெளவனப் புருஷர் இதுகாறும் மாரமங்கலம் மைனராக இருந்து வந்த ஒரு வேஷதாரி. இன்றைய தினம் அவருடைய வேஷம கோர்ட்டாருக் கெதிரிலேயே கலையப் போகிறது. அந்தச் சமயததிலே தான நீங்கள நிரம்பவும் ஆனந்தமடையப் போகிறீர்கள்." ஜட்ஜி:- (சந்தோஷமாக சிரித்துக் கொண்டு) இப்படிப்பட்ட பொது ஸ்தலத்திலா வேஷத்தைக் கலைக்கிறது? அந்தக் காரியம் மாத்திரம் வேண்டாம் - என்றார். அதைக் கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/130&oldid=853261" இலிருந்து மீள்விக்கப்பட்டது