பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


பக்கத்திலோ அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

பெரிய பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை அவர் மேற்கொண்டார். பாத்திரங்களைத் துலக்குகிறவர்களுக்கு அந்த வேலையில் சலிப்புத் தோன்றாமல் இருப்பதற்காகச் சில மாணவர்கள் அவர்களுக்கு முன்னால் சித்தார் வாத்தியம் வாசிப்பார்கள். எல்லோருமே இந்த வேலையில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்கும். தேன் கூடுபோல் இருந்தது சாந்தி நிகேதன்.

இத்தகைய மாறுதல்கள் ஒரு முறை ஆரம்பமாகி விட்டால், எப்பொழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும். போனிக்ஸ் கோஷ்டியினர் தாங்களே சமைத்துக் கொண்டனர். அவர்கள் சாப்பாடு மிகவும் எளிமையாகவும் இருந்தது. மசாலாச் சாமான்களே அந்தச் சாப்பாட்டில் இல்லை.

அரிசி, பருப்பு, கறிகாய் மாத்திரமேயன்றிக் கோதுமை மாவுகூட ஒரே சமயத்தில், ஒரே பாத்திரத்தில் நீராவியில் சமைக்கப்பட்டன. வங்காளிச் சமையலில் சீர்த்திருத்தம் செய்வதற்காகச் சாந்தி நிகேதனின் பையன்கள் அதே போன்ற சமையலைத் தொடங்கினார்கள். இரண்டொரு உபாத்தியாயர்களும், சில மாணவர்களும் இச் சமையலைச் செய்து வந்தார்கள்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு இப் பரீட்சை நிறுத்தப்பட்டுவிட்டது. பிரபலமான இந்த ஸ்தாபனம், கொஞ்ச காலத்திற்கு இந்தப் பரீட்சையை நடத்தியதால், அதற்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை என்பதே என் அபிப்ராயம். இதனால்