பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கலீலியோவின்


அந்த ராட்சத ஆமையின் முதுகு ஓட்டின் மீது மிகப் பெரிய யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த யானையின் முதுகு மீது கட்டப்பட்ட ஓர் அரண்மனை போல பூமி அமைந்துள்ளது என்று கற்பனை செய்யப்பட்டது.

அந்தக் காலத்தில் உலக வடிவத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே ஒரு புதிர் போல இருந்திருக்க வேண்டும் என் பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய உலக வடிவப் படம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு தான், சரியான உலக உருவம் என்று மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தான் புதிய புதிய உலக உருவக் கண்டு பிடிப்பாளர்கள் புதுப்புது நாடுகளைக் கண்டு பிடிப்பதற்காக, உலகத்தைச் சுற்றிச் சுற்றிப் பயணம் செய்துள்ளார்கள்.

அவர்களது கண்டு பிடிப்புகளுக்குப் பிறகுதான், உலகம் பந்து போல் உருண்டை வடிவமாக இருக்கிறது என்பதும், இடை வெளியற்றக் கடல்கள் இருக்கின்றன என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்.

முக்கியமான நிலப்பரப்புகள் ஆல்லது கண்டங்கள் என்று சொல்லப்பட்ட பூமி, கடலில் இங்குமங்குமாக இருக்கிறது என்பதும், அவை தீவுகளைப்போல அமைந்துள்ளது என்றும் தெரிய வந்தது.

பூமி உருண்டையானது என்று இராடோஸ் தனீஸ் என்பவர் கற்பனை செய்தது உண்மையானதே என்றாலும், அவரதது வரைபட எல்லைகளுக்கு அப்பால் நிலப்பரப்பு இருக்கிறதா என்று அவருக்கே தெரியாமல் இருந்தது.

ஆனால், பூகோள ரீதிகாகப் பார்க்கும் போது, உலகம் தனித்து இருக்கக் கூடிய ஒரு பகுதி என்பதை முதன் முதல்