பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

அவர் தான் தெளிவாகத் தெரிவித்தார். அப்போது அது ஒரு புரட்சிகரமான முதல் கண்டு பிடிப்பாக இருந்தது.

அவரது கண்டு பிடிப்பில், புது உலகம் என்று இன்று தாம் கூறும் நிலப்பரப்பு காணப்படவில்லை. கொலம்பஸ் என்ற நிலப்பரப்பு கண்டு பிடிப்பாளரது முயற்சிக்குப்பிறகே புது கண்டங்கள் சில இருப்பது உலகுக்குத் தெரிந்தது.

ஆனால், அவரது வரை படத்தில், ஐரோப்பா, எகிப்து இந்தியா போன்ற இடங்கள் எல்லாம் காணப்பட்டன. மக்களுக்குப் பாதுகாப்பாகப் பெரும் கடல்கள் உலகைச் சூழ்ந்துள்ளன என்பது மட்டும் தெரிந்துள்ளது.

கொலம்பஸ் என்ற மேதையின் கடல் பயணத்துக்கு முன்பு உலகம் உருண்டை வடிவமானது என்கதை; சில அறிஞர்கள் உட்பட எவருமே நம்பவில்லை.

ஆனால், உலகம் உருண்டை வடிவமானது என்பதை அப்போது மதவாதிகளும் நம்பவில்லை; மாறாக, அவர் கூறியதைக் கேட்டு அவர்கள் ஆதிர்ச்சியடைந்தார்கள்.

உலகம் தட்டையானது அல்ல; அது பந்து போன்ற ஓர் உருண்டையானது. வாணவெளியில் அது தன்னைத்தானே கற்றி வருகிறது என்ற செய்தி உலகம் முழுவதும் தெரிந்திடப் பலநூறு ஆண்டுகள் ஆயின.

அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக மதவாதிகளும். மக்களும் அவர்கள் நம்பியிருந்த நம்பிக்கையை அவர்கள் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

மிகப் பெரிய அண்டவெளியில் ஒரு சின்னஞ் சிறு கோளத்தில் நாம் வாழ்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுத்து வந்தார்கள்.

இந்த உன்மையை உணர்ந்தவர்கள் உலகுக்கு அதை உரைத்தபோது, அப்போது ஆட்சியிலே இருந்த மதவாதி-