பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

55



இந்த கிரேக்கக் கதைக்கு ஏற்றவாறு இந்திய நாட்டிலும் ஒரு கதை இருக்கிறது. இந்தியக் கதை கி.பி.505 ஆம் ஆண்டுக்கு இடையே நடந்த கதையாகும். மேற்கண்ட காலத்திற்கிடையே வாழந்தவர் வராகமிகிரர் என்பவர். இவர் ஒரு சோதிட வித்தகர். அவர் எழுதியதே ‘பிருகத் சம்ஹிதை’ என்ற சோதிட நூல் என்பர் வரலாற்றாசிரியர்கள்.

வராகமிகிரர் குப்த சாம்ராச்சியத்தின் ஆரூட நிபுணர். அவர் பத்து வயதாக இருந்த போது, அதாவது கி.பி. 515 ஆம் ஆண்டில், தம் உறவினர் ஒருவருடன் அரசவைக்குச் சென்றார். அப்போது மன்னனின் குழந்தைக்கு சோதிடம் எழுதிட அரசவை விவாதம் செய்து கொண்டிருந்தது. வழக்கம் போல வருவாய்க்குரிய வாறு ஹோ ஹோ என்று பேசும் சோதிடர்களைப் போல அந்த அரசவையும் மன்னன் குழந்தையைக் குறித்து மிகப் பிரபலமாக சோதிடப் பலன்களைக் கூறியது.

அப்போது வராகமிகிரர் எனப்படும் மிகிராகுலன் எழுந்து மன்னன் குழந்தைக்கு இரண்டாண்டு, ஆறுமாதம், மூன்று நாட்கள் வரை பாலரிட்டம் என்ற தோஷம் இருப்பதாகவும், குறிப்பிட்ட நாள் முடிந்ததும் குழந்தைக்கு ஒரு பன்றியினால் மரணம் ஏற்படுமென்றும் கூறினான். இதனால், அரசவைக்கும், அரசனுக்கும் கோபம் வந்தது. இருந்தாலும், மன்னன் சிறிது நேரம் சிந்தித்து, சோதிடம் கூறியவன் மேலெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, சோதிடனை நோக்கி, ‘சிறுவனே நீ கூறுகிறபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடை பெறாவிட்டால் தலையைத் துண்டிப்பேன், தெரியுமா?’ என்று கேட்க, மிகிராகுலன் சரியென ஒப்புக்கொண்டான்.

அரசன் ஒரு தீவில் கொண்டு போய், யாருக்கும் தெரியாதபடி ரகசியமாக ஓர் அரண்மனை போன்ற மாளிகையைக் கட்டித் தக்க பாதுகாப்புக்களுடன் குழந்தையைப் பாதுகாத்து வந்தான். சோதிடனின் கெடுநாட்கள் கழிந்தன. எடுத்துவா குழந்தையை