பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11

கொண்டால்தான், எதிர்கால மக்களாகிய நாம் அவரது கண்டுபிடிப்புகளை எவ்வாறு புரிந்து கொன்டு வாழ்ந்து வருகிறோம் என்பதையும் அறிந்தவர்கள் ஆவோம்!

அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள், உலக வடிவத்தைப் பற்றியும், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் சரியாகப் புரிந்து கோள்ளாதவர்களாகவே இருந்தார்கள்.

ஒரு காலத்தில் சூரிய கிரகணத்தைக் கண்ட ஐரோப்பிய மக்கள், கிணறு, குளங்கனை எல்லா மூடி விட்டார்கள். ஏதோ ஒரு வித விஷம் தண்ணீரில் கலந்து விடும் என்பது அவர்களிடையே எழுந்த அச்சமாக இருந்தது.

இப்போது கூட, தற்காலமக்கள் சூரிய கிரகணம் வருகின்ற போது, அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பாண்டங்களிலே எல்லாம் தர்ப்பைப் புல்லைத் துண்டு துண்டாக நறுக்கி அந்தப் பாத்திரங்களிலே போட்டு வைப்பதை நாம் இன்றும் பார்க்கிறோமே-ஏன்?

பண்டைய கால மக்கள் கிணறு, குளங்களிலே உள்ள தண்ணீரில் விஷம் கலந்து விடும் என்று எவ்வாறு அச்சப் பட்டனரோ, அதே அச்சம்தான்் இப்போதுள்ள மக்கள் இடையேயும் அந்த மூடநம்பிக்கை தொடர்ந்து இருக்கின்றது என்பதல்லவா பொருள்?

பழைய கால பெரூவியர்கள், தங்கள் நாய்களை அடித்து ஊளையிட வைப்பதன் மூலம் சூரியன் விழுங்க வரும் கொடிய பேய், பிசாசுகளைப் பயந்து ஓடச் செய்வதாக அவர்கள் நம்பினார்கள்.