பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51

நன்றாகப் புரிந்து கொண்டவர்? இவர் பேசும் கருத்துக்கள் எல்லாம் எங்களது அறிவை விட அவர் மீறியவர் என்பதை அல்லவா காட்டுகின்றது?

"கிறித்தவ ஊழியரான பாதிரிமார்களை மீறிப்பேசிட கலீலியோவுக்கு உரிமை கொடுத்தது யார் ஆணவமல்லவா அது. மக்களை எப்படி வேண்டுமானாலும் குழப்பிவிடலாம் என்று நம்புகிறாரா?"

-என்று, பாதிரிமார்களும், கிறித்துவ மார்க்கமும் கலீலியோவை பகிரங்கமாகவே குற்றம் சாட்டின. ஆனால், மக்கள் இடையே எங்கு பார்த்தாலும் பரபரப்பு ஏற்பட்டது.

கிறித்தவ மார்க்கமும், பாதிரியார்களும் தம் மீது நேருக்கு நேராகக் சாட்டியக் குற்றச்சாட்டுக்கனைக் கலீலியோவும் நேருக்கு நேராகவே மறுத்தார்!

"நான் எந்த இடத்திலும் இயேசு பெருமானைவிட மேலானவன் என்றோ, அவரைவிட ஞானம் பெற்றவன் என்றோ, எங்கும், எந்த இடத்திலும் பேசியது கிடையாது.”

"ஆண்டவராகிய இயேசுவை நான் எங்கும் களங்கப்படுத்தும் வகையில் நான் எண்ணியது கிடையாது" என்பதைக் கலீலியோ திட்டவட்டமாக அவர்களை மறுத்தார்!

"பைபிள் நூல் விஞ்ஞான அறிவைக் கற்றுத்தர ஏற்பட்ட நூல் அன்று" என்று பேசியது உண்மை. ஆனால், நான் பைபிள் நூலைக் குறை கூறிப்பேசியது இல்லை.

"மனித இனம்; கர்த்தராகிய ஆண்டவனை அடைய வழி கூறும் நூல் பைபிள்" என்று நான் பேசி இருக்கிறேனே தவிர, பைபிளைப் படிக்காதே என்றோ,