பக்கம்:மதன கல்யாணி-3.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O7 ஜெமீந்தாரும், அவரது ஆட்கள் சிலரும் ஏறிக்கொண்டனர். உடனே கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் சிவஞான முதலியாரை நோக்கி, "இவர்கள் ஸ்மரணை தெளிந்து எழுந்தவுடனே ஒருவரை ஒருவர் பார்ப்பது நல்லதல்ல. இவர்கள், மிகுந்த ஆவலோடும் வாத்சல்யத்தோடும் ஒருவரோடொருவர் கண்டு பேசுவார்கள். இவர்கள் இப்படி மெலிவடைந்திருக்கும் நிலைமையில் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி நாம் விடலாகாது. இவனை நான் என்னுடைய பங்களாவுக்குக் கொண்டு போகிறேன். நீங்கள் அந்த அம்மாளை அவர்களுடைய பங்களாவுக்குக் கொண்டு போய் ஆகவேண்டிய சிகிச்சைகளை ஜாககிரதையாகச் செய்யுங்கள்" என்று கூறிய வண்ணம், தாம் இருந்த மோட்டாரைத் தமது பங்களாவான மனோகர விலாசத்திற்கு விடச் செய்தார். அப்படியே அந்த மோட்டாா வண்டி மைலாப்பூரை நோக்கிச் சென்றது. கல்யாணி யம்மாள் இருந்த மோட்டார் வண்டி தேனாம்பேட்டையை நோக்கிச சென்றது. அன்றைய தினம் நடந்த விசாரணை மிகவும் விரிவானதாகை யால், காலையில் தொடக்கப்படட அந்த விசாரணை முடிவு பெற மாலை நேரம் வரையில் பிடித்தது. அதற்குமேல், மற்ற சம்பவம் எல்லாம் நிகழ்ந்தமையால், மோட்டார் வண்டிகள் பங்களாக்களுக் குப் போய்ச் சேர்ந்த போது விளக்குகள் கொளுத்தப்பட்டுப் போயிருந்தன. மதனகோபாலனை மோட்டாரில் வைத்துச் சென்ற கிருஷ்ணாபுரம ஜெமீந்தாரும மற்றவர்களும், வண்டி மனோகர விலாசத்தில் போய் நின்றவுடனே, ஒரு கட்டிலைத் துக்கிக் கொணர்ந்து மோட்டார் வண்டியின் பக்கத்தில் வைத்து மதனகோ பாலனைத் துக்கி அதன்மேல் படுக்கவைத்து அசையாமல் கட்டி லோடு அவனைத் துக்கிக் கொண்டு உள்ளே போயினர். அந்த விபரீதக் காட்சியைக் கண்ட மோகனாங்கியும், மற்ற வேலைக்காரர் களும் பெருத்த வியப்பும் திகைப்பும் அடைந்து பதறிப் போய், "என்ன! என்ன!" என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்து கூடினா. கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரோடு கூட வண்டியில் வந்த சிலர், கச்சேரியில் சொல்லப்பட்ட தீர்மானத்தையும், மதனகோபா லன் தனது தாய் வீழ்நதிருநததைக் கண்டு தானும் வீழ்ந்ததையும் un.a5.III–14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/210&oldid=853350" இலிருந்து மீள்விக்கப்பட்டது