பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41

எட்டாவது சந்திரனை வியாழன் மண்டலத்திலே இருப்பதாகக் கண்டு பிடித்து உலகுக்கு அறிவித்தார்கள். இந்த கணக்குகள் மூலமாக, வியாழன் மண்டலத்தில் மொத்தம் எட்டு சந்திரன்கள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.”

கலீலியோவின் வியாழன் கிரக ஆராய்ச்சி வீண் போகவில்லை; அவ்வளவும் உண்மையே என் நம்பிக்கையைத் தற்போதைய வான்வெளி ஆய்வுகள் நிரூபித்த விட்டன அல்லவா?

அவர் நான்கு நிலாக்கள் வியாழன் மண்டலத்தில் இருப்பதாகக் கண்டு பிடித்தார்! ஆனால், தற்கால வான் வெளி ஆய்வுகள் பன்னிரண்டு சந்திரன்கள் இருப்பதாகக் கூறியுள்ளன என்றால், அந்த மகான், வானியல் மேதை; வியாழன் மண்டல ஆய்வின் போது எவ்வளவு அரும்பாடுபட்டிருப்பார் என்பதை எண்ணிப் பார்ப்போருக்குத்தான் அவரது சிந்தனை திறனை உணவார்கள். இல்லையா?

11. கலீலியோ செய்த சூரியன் ஆராய்ச்சி!

இவ்வளவு அரும்பாடுகளுக்குப் பிறகும் கூட, கலீலியோ தனது ஆய்வுப் பணியில் ஓய்வு பெற்றாரா? என்றால் இல்லை. 1610-ஆண்டில், வியாழன் கிரக ஆராய்ச்சியை முடித்த உடனே, சூரியனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய முற்பட்டார்.

சூரியன் தோற்றத்தில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றனவே-ஏன்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அதேநேரத்தில் சூரியனில் காணப்பட்ட கரும்புள்ளிகள் அதன் முகத்தின் மீதே நகர்ந்து செல்வதனையும் பார்த்தார். அதற்குரிய காரரணத்தையும் ஆராய்ந்தார்!