பக்கம்:மதன கல்யாணி-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மதன கல்யாணி என்றே மதித்து இதுவரையில் வளர்த்து வந்தார். அந்தப் பையன் பிடில் வித்துவானிடத்தில் ஐந்தாறு மாசகாலம் இருந்தவுடனே, மூன்றாவது வயசிலேயே, அவனுக்கு அபாரமான சங்கீத ஞானம ஏற்பட்டுவிட்டது. அதை உணர்ந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாா அவன் பிடில் வித்துவானுடைய பிள்ளை ஆகையால், அவனுக்கு அபாரமான சங்கீத ஞானம் ஏற்பட்டுவிட்டது. அதை உணர்ந்த கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் அவன் பிடில் வித்துவானுடைய பிள்ளை ஆகையால், அவனுக்கு அவ்வளவு அபாரஞானம் இயற்கையிலேயே இருக்கிறதென்று எண்ணி, அவனை மைசூர் சேஷண்ணாவிடத்தில் விட்டு வீணை பயிற்றிவைத்தார்; இவ்வளவு தான் எனக்குத் தெரியும் - என்று சின்னையா நாயுடு வாக்குமூலம் கொடுத்தார். சர்க்கார் வக்கீல்:- (அவரை நோக்கி) அந்த பிடில் வித்துவான உமக்கெழுதிக் கொடுத்த ஒப்பந்தப் பத்திரத்தைக் கொண்டு வரும் படி சம்மன் வந்ததே. அதை கொண்டு வந்தீரா? சி. நாயுடு:- இதோ கொண்டு வந்திருக்கிறேன். (ஒரு பத்திரத்தை விசாரணை குமாஸ்தாவிடத்தில் கொடுக்கிறார்) ச. வக்கீல்:- இந்தப் பத்திரம் அவளுடைய கையாலேயே எழுதி ரிஜிஸ்டர் செய்யப்பட்டதா? சி. நாயுடு:- ஆம். ச. வக்கீல்:- (கருப்பாயியின் மொந்தையிலிருந்த துண்டுக கடிதத்தை எடுத்துக் காட்டி) இது யாருடைய எழுத்தென்பதைப் பார்த்துச் சொல்லும். சி. நாயுடு:- இது பிடில் வித்துவான் குழந்தையை விற்றவனுக்கு எழுதிக் கொடுத்த துண்டு காகிதம். இந்த எழுத்தும் நான் இப்போது தாக்கல் செய்த பத்திரத்தின் எழுத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறது பார்த்தீர்களா - என்றார். உடனே ஜட்ஜி துரை சின்னையா நாயுடுவை வெளியில் போய் இருக்கும்படி சொல்லி அவரை அனுப்பிவிட்டு, இராயப்பேட்டை வைத்தியசாலை சாஜன் துரையையும் மதனகோபாலனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/187&oldid=853324" இலிருந்து மீள்விக்கப்பட்டது