பக்கம்:மதன கல்யாணி-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197 மதனகோபாலனண்டையில் வந்து கைகுவிதுது அவனுக்கு நமஸ்காரம் செய்து, "ஏதோ இதுவரையில் காலவித்தியாசத்தினால், தாங்கள் தங்களுடைய சொந்த ஸ்தானத்தை விட்டு வேறே இடத்தில் இருக்க நேர்ந்தாலும், இப்போதாவது தாங்கள் எங்களி டம் திரும்பி வந்து சேருவது எங்களுக்கு நிரம்பவும் சந்தோஷமாக இருக்கிறது! நான் தங்களுடைய போஷகர்களுள் ஒருவனாகிய வக்கீல் சிவஞான முதலியாா என்பது தங்களுக்குத் தெரிந்திருக்க லாம்" என்று அன்பாகவும் மரியாதையாகவும் கூறினார். அப்போதே கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது ஆலிங்கனத்திலிருந்து விடுபட்ட மதனகோபாலன் மிகுந்த பதைப்பும் ஆவலும் கொண்ட வனாய் சிவஞான முதலியாரைப் பார்த்து, "ஐயா! என்னுடைய தாயார் எங்கே இருக்கிறார்கள்? அவர்களைப் பார்க்கவும் அவர்க ளோடு பேசவும் என்னுடைய மனம் துடிக்கிறது; தேகம் பறக்கிறது; அவர்களை அதிசீக்கிரத்தில் பார்க்காவிட்டால் நான் மயங்கிக் கீழே விழுந்து விடுவேன் போல இருக்கிறது. ஒரே நிமிஷத்தில் என்னை நீங்கள் என்னுடைய தாயாரின் சன்னிதானத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்" என்று கூறுவதற்குள் ஆவேசத்தினாலும், மன வெழுச்சியினாலும் அவனது வாய் குழறிப் போய்விட்டது. கைகாலகள் எல்லாம் முறுக்கல் கொள்ளுகின்றன. தேகம் தள்ளாடு கிறது. அவனது பரிதாபகரமான நிலைமையைக் கண்ட எல்லோரும் இன்பமும் துன்பமும அபாரமாகப் பெருகி எழுந்த உள்ளத்தினராய் பொங்கிப் பொருமினா. அவனும, கல்யாணியம்மாளும் சந்தித்துப் பேசும் மகா உருக்கமான சந்தோஷக் காட்சியைத் தாங்களும் காண வேண்டும் என்றெண்ணி பொதுஜனங்களும் அவர்களோடு கூடப் போகலாயினர். அந்தச் சமயத்தில் சிவஞான முதலியார் மதன கோபாலனை நோக்கி, "ஐயா! தங்களுடைய தாயார் அதிக தூரத்தில் இல்லை. இதோ கச்சேரிக் கெதிரில் தம்புசெட்டித் தெருவில் உள்ள இரண்டாவது வீட்டில் வநதிருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே நடந்த வர்த்தமானங்கள் எல்லாம் சுருக்கெழுத்து மூலமாக எட்டி இருக்கும் அவர்களும் தங்களைப் பார்க்க ஆவல் கொண்டிருப்பார் கள். வாருங்கள் போவோம" எனறு அவசரமாகக் கூற, மதனகோ பாலன் தனது ஆவலினால் மெய்ம்மறந்தவனாய் ஒட்டமாகப் பாய்ந்து பாய்ந்து நடககலானான். சிவஞான முதலியார் மதன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/200&oldid=853339" இலிருந்து மீள்விக்கப்பட்டது