பக்கம்:மதன கல்யாணி-3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மதன கல்யாணி தனது தாய்க்காகிலும் வக்கீல் சிவஞான முதலியாருக்காகிலும் சொல்லி அனுப்பாமல் சும்மா இருந்துவிட்டான். போலீசார் அநத விஷயங்களை வெளியிடாமல் தமது விசாரணைகளைப் பரம ரகசியமாக நடந்திவந்தமையாலும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரினது பங்களா தேனாம்பேட்டையில் இருந்து வெகுதூரத்திற் கப்பால் இருந்தமையாலும், அந்த விஷயம் கல்யாணியம்மாளுக்கு எட்டவே ஏதுவில்லாமல் இருந்தது. ஆகவே, அவள் மறுநாட காலையில் மதனகோபாலனைப் பார்த்த போது, அவன் சொல்லத் தெரிந்து கொள்ளும்படி ஆகிவிட்டது. மைனரும், பாலாம்பாளும இருந்த சாயுஜ்ய நிலயம் என்ற பங்களாவிலிருந்த சிப்பந்திகள் எல்லோரும, மைனரும், பாலாம்பாளும் தப்பிவர மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள் ஆகையால், அந்த பங்களாவி லிருநத ஆடைகள், பாத்திரங்கள், பண்டங்கள் முதலிய சகலமான பொருட்களையும் ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு அந்த இடத்தை அன்றைய இரவிலேயே துடைத்துக் காலி செய்துவிட்டு, போன இடந் தெரியாமல ஒடிப் போயினர். ஆகவே, மைனருக்கும் பாலாம்பாளுக்கும் அவர்களது உடம்பில் இருந்த துணிகளும் அவர்கள் செய்த கொலைக் குற்றமுமே ஆஸ்திகளாக மிஞ்சி நின்றன. அவர்கள் அப்படிப்பட்ட பரிதாபகரமான நிலைமையில் இருக்க அந்த இரவு கழிந்தது. மறுநாட் காலை முதல் இரண்டு நாடகள் வரையில் போலீசார் தங்களது விசாரணைகளை எல்லாம் மிகவும் துடியாக நடத்திப் பற்பல ஊர்களுக்குத் தந்தியும் ஆள்களையும் அனுப்பி அதை அதிக விமரிசையாகவும் மிகவும் ரகசியமாகவும் நடத்தினார்கள. மாஜிஸ்டிரேட்டுக்கும் ஜட்ஜிக்கும் பற்பல அவசர மான அறிக்கைகளை அனுப்பினார்கள். குற்றவாளிகள் இருவரும் மறுநாட் காலை 10-மணிக்கு விசாரணைக் கைதிகள் இருக்க வேண்டிய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்கள். கொலைக் குற்றம் நடந்த தினத்திற்கு மறுநாட் காலையில் கல்யாணியம்மாளும் சிவஞான முதலியாரும போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் மைனரை விட்டுவிடுவதற்காகத் தாங்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாகச் சொல்லி நெடுநேரம் போலீசாரிடம் கெஞ்சி மன்றாடியதெல்லாம் அவமாயிற்று; அவன் மீது சுமத்தப்பட்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/126&oldid=853256" இலிருந்து மீள்விக்கப்பட்டது