பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நன்றி

ன் தந்தையாரை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. வேங்கடம் முதல் குமரி வரையிலும், வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள தமிழ் அன்பர்களுக்குத் தமது கலைக் கட்டுரைகள் மூலமாகவே நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் வானொலி மூலம் தமிழ் மக்களுக்கு அளித்த கலைக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை, கலைஞன் பதிப்பகத்தார் வெளியிட முன் வந்தது பொருத்தமாக அமைந்துவிட்டது.

நூலுக்கு அருமையான முன்னுரை தந்துதவியிருக்கும் சகோதரர், தொல்பொருள் துறை இயக்குநர் திரு. ஆர். நாகசாமி அவர்களுக்கு, என் வணக்கமும் நன்றியும் உரியன.

இந்நூலை வெளியிட என் தந்தையின் வாழ்நாளிலேயே அனுமதி வழங்கிய திருச்சி வானொலி நிலையத்தாருக்கும், குறைந்த கால அளவில் அழகாக அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அவர்களுக்கும் என் நன்றி உரியது.

கலைஞன் பதிப்பகத்தாரால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட, இந்தியக் கலைச் செல்வம் என்ற இந்த நூல், இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவருகிறது. என் தந்தையார், திரு.தொ.மு.பாஸ்கரத்