பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொண்டைமான் அவர்கள், அவ்வப்போது, திருச்சி வானொலியில் ஆற்றிய உரைகளே, நூல் வடிவம் பெற்றிருக்கிறது. இந்தியக் கலைச் செல்வமான, சிற்பம், சித்திரம், அதற்கான உத்திகள், பரிமாணங்கள் இவற்றையெல்லாம் நுணுகி ஆராய்ந்து, அதைக் கலை அன்பர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார்கள். அருங்கலைச் செல்வர் திரு, நாகசாமி அவர்கள், இந்த நூலுக்கு அப்போதே அருமையானதொரு முகவுரை வழங்கியிருக்கிறார். அதனையே இந்தப் பதிப்பிலும் பயன்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகிறோம். இந்தக் கலைச் செல்வம், கலைஞர்களுக்கும் கலா ரசிகர்களுக்கும் என்றென்றும் இன்பம் தரக் கூடியது. இதனை மீண்டும் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டு உதவும் கலைஞன் பதிப்பகத் துக்கு நன்றி உரியது.

ராஜேஸ்வரி நடராஜன்


'பாஸ்கர நிலையம்'
10, 7ஆவது குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை - 20.