பக்கம்:மதன கல்யாணி-3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மதன கல்யாணி சம்பந்தமான சகலமான வியாதிகளைப் பற்றியும் பிரத்தியேகமாகப் படித்துத் தேர்ச்சியடைந்த மகா நிபுணர்களான சில டாக்டர்களிடத் தில் பாடங்கற்றுக் கொண்டு வந்தவன். தோலின் மேலுண்டாகும் குஷ்டம், கிரந்தி முதலிய மேகநீர் சம்பந்தமான சகல வியாதிகளையும் அதிசுலபத்தில் விலக்க அநேக முறைகளை நான் தெரிந்து கொண்டு வந்து கையாடி வருகிறேன். ஆலந்துரிலிருந்த அம்பட்டக் கருப்பாயி என்பவளை எனக்குப் பல வருஷ காலமாக தெரியும். அவள் மருத்துவம் செய்வதில் மிகவும் திறமை வாய்ந்தவள். சைதாப்பேட்டையில் உள்ள வீடுகளில் பிரசவம் நேரும் போதெல்லாம், ஜனங்கள் அநேகமாக இவளையே அழைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் சென்ற பல வருஷங்களாக பெருத்த குடிகாரியாகி, யார் கூப்பிட்டாலும் வராமல் அலட்சியம் செய்யத் தொடங்கவே, ஜனங்கள் அவளைக் கூப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். சுமார் பதினைந்து வருஷ காலத்துக்கு முன் அவளுக்கு ஒர் ஆண் குழந்தை இருந்ததாக எனக்கு நினைவுண்டாகிறது. அவளோடு கூட அந்தக் குழந்தையும் வருமாதலால், நான் அதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்; ஒரு நாள் அவள் அந்தக் குழந்தையை என்னுடைய வீட்டுக்குக் கொண்டு வந்து அதனுடைய மார்பில் மாம்பிஞ்சு போல திராவகத்தால் சுட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். எதற்காக அப்படிச் செய்யச் சொல்லுகிறாய் என்று நான் அவளிடம் கேட்டேன். அந்தக் குழந்தைக்கு அடிக்கடி மாந்தம் வருவதாகவும், அந்த மாதிரி சுட்டால் மாந்தம் நின்று போய் விடுமென்றும் ஒரு சாமியார் சொன்னதனால் அப்படிச் செய்து பார்க்க விரும்புவதாகச் சொன்னாள்; நம்முடைய பழைய காலத்துச் சிகிச்சைகள் அநேகத்தில் எனக்கு நிரம்பவும் நம்பிக்கையுண்டு. அந்த மாதிரி சில இடங்களில் சுடுவதால் ஜன்னி, பக்கவாதம், காக்கை வலிப்பு முதலிய கொடிய வியாதிகள் எல்லாம் நீங்கியதை நான் அனுபவத் தில் கண்டிருக்கிறேன். ஆகையால், அவள் சொன்னதிலும் ஏதாவது சூட்சுமமிருக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டு நான் அம்மாதிரியே ஒரு திராவகத்தின் உதவியால், அவள் காட்டிய அளவுப்படி ஒரு மாம்பிஞ்சு மாதிரி மார்பில் சுட்டு அந்தப் பாகத்தைக் கருப்பாக்கிக் கொடுத்தேன். அது தான் அவளை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/182&oldid=853318" இலிருந்து மீள்விக்கப்பட்டது