பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57

எடுத்து வைத்து, அவற்றுக்கான காரண காரியங்களை திருச்சபை மண்டபத்தில் விளக்கிக் கொண்டே வந்தார்.

இறுதியாக, அவரது புத்தகக் கருத்துக்கு முத்தாய்ப்பாக, பூமியைச் சூரியன் சுற்றுவது இல்லை என்பதை வலியுறுத்தித் தர்க்கவியலோடு கலீலியோ அற்புதமாக வாதாடினார்.

என்ன வாதாடி என்ன பயன்? எட்டிப் பழத்திலே தேன் சுவைச்சாறா சுரக்கும்? எட்டிதானே ஊரார்; எனவே அவரது உண்மைகளையே குற்றம் சாட்டி கலீலியோவுக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை' என்று போப்பாண்டவர் தீர்ப்பளித்தார்!

ஆயுள் தண்டனை சிறை பெற்ற போது கலீலியோவுக்கு வயது எழுபது; மூதறிஞராகி விட்டார்; பாவம்! சிறையிலே அவர் அடைபட்டதும் மதவாத வெறிபிடித்த அதிகாரிகளால், ஊழியர்களால், கிருச்சபைக் தொண்டர்களால், குருமார்களால், பாதிரியார்களால், நேரிடையாயாகவும், இலை மறை காயாகவும் அவர் துன்புறுத்தப்பட்டார்; சித்திரவதைக்கும் ஆளானார்: வயது எழுபது அல்லவா? பாவம்! பாவம்!

இவ்வாறு கலீலியோ இருபத்திரண்டு நாட்கள் இக் கொடிய சிறைவாசத்தால் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்; இரக்கம் என்பதே அவருக்குக் கடுகளவும் காட்டப்படவில்லை!

ரோமாபுரி கார்டினர் ஒருவர்; அவர் பெயர் பெல்லாமேன்; அவரது இடைவிடாத பெரும் முயற்சியால் கலீலியோ சீயன்னா என்ற நகருக்கு உடனடியாகச் சென்றுவிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாடு கடத்தப்பட்டார் கலீலியோ! குடும்பத்தோடு சியன்னா நகர் சென்றார் எழுபது வயதுக்கு மேற்பட்ட