பக்கம்:மதன கல்யாணி-3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 161 சரிப்படல்லெ. அம்மா அதே வெசனமாக் கெடக்கறாங்க. புள்ளெ வராமப் போனா, இன்னம் ரெண்டு மூணு நாள்ளே அவுங்க செத்துப்பூடுவாங்க போலெ இருக்குது. அதுக்காவத்தான் இந்த ரோசனெ பண்ணினேன். அந்த அம்மாதன்னொடெ புள்ளெயெத் தவுர மத்த எந்தப் புள்ளெயும் கையாலெகூடத் தொடமாட்டாங்க; அதுவும் அம்பட்டச்சியோடெ புள்ளெயின்னு தெரிஞ்சா, கண்ணாலே கூடப் பாக்கமாட்டாங்க. அந்த அம்மாளோடெ புள்ளெ நல்ல செழுப்பா குண்டா இருந்திச்சு. இது கருப்பா எளெச்சுப் போயி இருக்குது. ஆனா, மொகம் மாத்ரம் கொஞ்சம் சரியா இருக்குது. நான் இதெக் கொண்டு போயிக் குடுத்து இதுதான் திருட்டுப் போன கொயந்தெ, சரியான ஆகாரம் இல்லாமெ இது கொறவன் வூட்டுலெ இருந்ததுனாலே, கருத்து எளச்சு இப்பிடி உருமாறிப் போச்சுன்னு சொல்லிப்புட்றேன். ஆனா அவுங்க நம்பராப்பலெ நாம்ப ஒரு வேலெ செய்யனும். திருட்டுப் போன புள்ளெயோடெ மாருலெ மாம்பிஞ்சு கணக்கா ஒரு மச்சம் இருந்திச்சு. அந்த மாதிரி நீயே சுட்டுக் குடுக்கணும்" இன்னு எங்கிட்டச் சொன்னா. அதெயெல்லாம் நான் ஒப்பிக்கினேன். ஆனா, மாங்காப்பிஞ்சு மாதிரி நாம்ப சுட்டா அது சரியா வராதுன்னு எனக்குத் தோணிச்சு. எனக்குத் தெரிஞ்ச டாக்குட்டரு ஒருத்தரு சைதாப்பேட்டேலெ இருக்கறாரு. அவரொடெ பேரு கேசவலு நாயுடு. அவுரு வைத்தியம் செய்யற வூட்டுகள்ளெ மருத்துவம் பாக்கறத்துக்காவ அவுரு என்னெக் கூப்பிடுவாரு. அதனாலே அவுருக்கும் எனக்கும் பளக்கமுண்டு. என்னொடெ கொயந்தெயெ, அவுருக்கிட்டக் கொண்டு போயி, மாருலே மாங்காப்பிஞ்சு போலெ தெராவகத்தாலெ சுட்டுக் கருப்பாக்கிக் குடுக்கச் சொன்னேன். அவுரு என்னாத்துக்குன்னு கேட்டாரு; அது என்னொடெ கொயந்தெயின்னும், அதுக்கு அடிக்கடி மாந்தம் வருதுன்னும், அதுக்காவ, அப்பிடிச் சுட்டா மாந்தமே வராதுன்னும் ஒரு பொய் சொன்னேன். ஒடனே அந்த டாக்குட்டரு அப்பிடியே சுட்டுக் குடுத்தாரு. ஒடனே நான் புள்ளெயெக் கொண்டாந்து, பொன்னம்மாக்கிட்டக் காட்டினேன். அந்த மாங்காப்பிஞ்சு மச்சம் அவ சொன்னாப்பலெ சரியா அமெஞ்சு போச்சுன்னு சொல்லி, அந்தப் பொன்னம்மா நொம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/165&oldid=853299" இலிருந்து மீள்விக்கப்பட்டது