பக்கம்:மதன கல்யாணி-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 133 சாட்சிகளாக வரப் போகிறார்கள் என்பதும், ஒவ்வொருவரும் எந்த விஷயத்தை ருஜூப்பிக்கப் போகிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் கோரிய எவ்வித நகலும் கொடுக்கப்பட வில்லை. இப்போது சர்க்கார் கட்சியின் சாட்சிகள் எல்லோரும் தங்களுடைய வாக்குமூலங்களைக் கொடுக்கட்டும். அதன் பிறகு நாங்கள் எங்களுடைய கட்சிக்காரர்களோடு கொஞ்ச தூரம் கலந்து யோசித்து, அவர்கள் சொல்லும் சமாதானங்களை அறிந்து கொண்டு குறுக்கு விசாரணையை நடத்துகிறோம். இந்தக் குற்றமோ மகா பயங்கரமான கொலைக் குற்றம் இதை ஒருதலைச் சார்பாகவே நடத்திக் கொண்டு போய் குற்றமற்றவர்களை மரண தண்டனைக்கு ஆளாக்குவது கேவலம் அநியாயமான காரியம் என்பது கோர்ட்டார் அவர்களுக்குத் தெரிந்த விஷயம். இருட்டி லிருந்து ஒரு மனிதனை முதுகுப் பக்கத்தில் குத்திக் கொல்லுவது போல, போலீசார், தங்களுடைய விசாரணைகளை நேருக்கு நேர் நடத்தாமல், ஒளிமறைவாக நடத்தி இருப்பது ஆண்மைத்தனமும் நீயுமாகாது. நாங்கள் எங்களுடைய கட்சிக்காரர்களோடு பேசுவதற் குக்கூட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுவரையில் எந்த வழக்கிலும் இப்படிப்பட்ட ஒழுங்கீனமும் கொடுமையும் நடந்திராதெனபதை விஷயங்களே எடுத்துப் பேசும். ஆகையால், கோர்ட்டார் அவர்கள குறுக்கு விசாரணையைக் கடைசி வரையில் நிறுத்தி வைக்கத் தயைகூர்ந்து அனுமதிக்க வேண்டும்" என்று நயமாகவும் கம்பீரமாகவும் கேட்டுக் கொண்டார். உடனே ஜட்ஜி, "எல்லா சாட்சிகளுடைய குறுக்கு விசாரணை களையும் நாம் கடைசியில் வைத்துக் கொள்வதைவிட இப்போது இவர் சொன்ன வாக்குமூலம் சம்பந்தப்படுகிற வரையில் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாமோ, அவைகளைக் கேட்டு விடுங்கள்; மற்றவைகளை மாத்திரம் பின்னால் வைத்துக் கொள்ளலாம்" என்றார். பாரிஸ்டர் குரோட்டன், "மறுபடியும் நாங்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று கோர்ட்டார் அனுமதிக்கிற நிபந்தனையின் மேல் நாங்கள் இப்போதும் கூடுமான வரையில் குறுக்கு விசாரணை செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று ஜட்ஜியை நோக்கிக் கூறியபின், சாட்சிக் கூண்டின் மேல் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/137&oldid=853268" இலிருந்து மீள்விக்கப்பட்டது