பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


இவன் அரியணையேறியதும் முதன் முதலாகப் பாண்டியரையும், சேரரையும் வென்றான்; பிறகு குடகு நாட்டையும், மைசூரின் ஒரு பகுதியான கங்கபாடியையும் வென்றான் ; பல்லவர்களை வென்று நுளம்பபாடியைக் கைப்பற்றினான் ; தெலுங்க நாட்டையும், கீழைச் சாளுக்கிய நாட்டையும், கலிங்க நாட்டையும் வென்று கைப்பற்றிக் கொண்டான்; ஈழநாட்டின் வடபகுதியைக் கப்பற் படையின் துணைகொண்டு வெற்றிகண்டான்; 'பழந்தீவு பன்னீராயிரம்' என்று பண்டைக் காலத்தில் குறிப்பிடப்பட்ட மாலத்தீவுகளையும் வென்றான். இவ்வாறு அரிய பல வெற்றிகளைப் பெற்ற இராசராச சோழன், தன் பெயர் என்றும் நிலைத்து நிற்பதற்காகத் தன் பெயரால் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான். அது 'இராசராசேச்சுரம்' என்ற பெயரைத் தாங்க இன்றும் அவன் புகழைப் பறை சாற்றிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது.

இராசராசன் தஞ்சைப் பெருங் கோவிலைக் கட்டியதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. அவன் கலைப்பிரியன். எனவே சிறந்த கலைக்கோவில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மற்றொரு சிறந்த காரணம், அவன் சைவ சமயத்தின்பால் கொண்டிருந்த அளவு கடந்த பற்றாகும். சோழர்கள் தில்லையிலுள்ள சிவன் கோவிலுக்குத் திருப்பணி புரிவதைக் கடமையாகக் கொண்டிருந்தனர். இவனும் அப் பணிகளைக் குறைவறச் செய்தான். இருந்தாலும் , தன் தலை நகராகிய தஞ்சாவூரில், தில்லைக் கூத்தப் பெருமானின் கோவிலைப்போன்று சிறந்த