பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பிற்பட்டவர்கள் என்றாலும், பாரோ மன்னர்களைப் பற்றியும், அவர்களுடைய பழம் பெரும் நாகரிகத்தைப்பற்றியும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டுகளில் புதை பொருள் ஆராய்ச்சி சிறப்புறத் தொடங்கியது. நிலத்திற்கடியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதையுண்டு மறைந்த பொருள்களையெல்லாம் தோண்டி எடுத்துப் பழமையான நாகரிகச் சிறப்புக்களையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

பாரோ மன்னர்களின் எகிப்திய நாகரிகம் அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்களும், தூண்களும், நாகரிகச் சின்னங்களும் நிலத்திற்குள் இன்றும் மறைந்து கிடக்கின்றன. புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்று அவற்றையெல்லாம் தோண்டி எடுத்துள்ளனர். தோண்டியெடுக்கப்பட்ட அச்சிற்பங்களெல்லாம் சிறிது கூடப் பழுதுபடாமல், சிற்பியின் கையிலிருந்து புதிதாக வெளிப்பட்டவை போல் தோன்றுகின்றன. எகிப்து நாட்டில் படிந்திருக்கும் மணலும், தட்பவெப்ப நிலையுமே இதற்குக் காரணம்.

எகிப்து நாட்டில் எந்த இடத்தைத் தோண்டினாலும், பழங்காலச் சின்னங்களைக் காணலாம். இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. உலகில் வாழ்ந்த மக்கள் எல்லாரும் இறப்பிற்குப்பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பினர். தமிழ் மக்-