பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


அவள் சிவபக்தியைப் பற்றியும் அரசனிடம் எடுத்துக் கூறி விளக்கினர். உடனே அரசன் அக்கிழவியை அழைத்து விசாரித்தான். பிரமரந்திர தளத்தில் அமைப்பதற்கு ஏற்ற அளவுடைய ஒரு கல் தன் வீட்டு முற்றத்தில் கிடப்பதாக அக்கிழவி சொன்னாள். அரசன் தன் ஆட்களையும் யானைகளையும் அனுப்பி அக்கல்லைக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான்.

தஞ்சாவூர் மாவட்டக் கழகப் பனகல் கட்டடத்திற்கு அருகில் 'அழகி குளம்', 'அழகி தோட்டம்' என்ற குளமும் தோட்டமும் உள்ளன. இவற்றை இராசராசன் அக்கிழவிக்குத் தீர்வையின்றிப் பதிவு செய்து கொடுத்தான் என்ற வரலாறு ஒன்று வழங்குகிறது. இதைப்பற்றிக் கூறப்படும் வேறொரு கதையும் உள்ளது. கோபுர வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, அழகி என்ற ஒரு கிழவி நீரும் உணவும் சிற்பிகளுக்குக் கொடுத்து உதவி செய்தாளாம். அவளுடைய பணிவிடையைப் பாராட்டக் கருதிய சிற்பிகள், அவள் வீட்டில் கிடந்த ஒரு கல்லைக் கொண்டுவந்து பிரமரந்திர தளத்தில் பொருத்தினார்கள் என்றும் கூறப்படுகிறது. இதைப்பற்றி வழங்கும் மூன்றாவது கதை பின்வருமாறு:

இக்கல்லை ஓர் இடையர் குலப்பெண் கொடுத்து உதவினாள். அவளுடைய சிவ பக்தியை வியந்த அரசன் அவளுடைய ஊரில் இராசராசேச்சுரம் என்ற பெயரால் ஒரு சிவன் கோவிலைக் கட்டினான். அக்கோவில் நாளடைவில் தாராசுரம் என்ற