பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

 கின்றன. 28,000 வகையான உயர்ந்த இரத்தினக் கற்கள் இங்கு உள்ளன. இவற்றை வகைப்படுத்தித் தனித்தனியே சிறு அறைகளுடைய மரப்பெட்டியில் பேணிவைத்திருக்கிறார்கள்.

சிற்பக்கலையும் ஓவியக்கலையும் செழித்து வளர்வதற்கு நம் நாட்டிலும் சரி, மேலை நாட்டிலும் சரி, சமயங்களே பெருந்துணையாக இருந்திருக்கின்றன. சமயக் கடவுளரின் உருவங்களையும், புராண நிகழ்ச்சிகளையும் சிற்பங்களாகச் செதுக்கியும், ஓவியங்களாகத் தீட்டியும் கலைஞர்கள் இவ்விரு கலைகளையும் வளர்த்தனர். பௌத்தர்கள் புத்த பெருமானின் திருவுருவத்தைப் பல வடிவங்களில் செதுக்கினர். இந்துக்கள் கோவில்களில் இறை வடிவங்களையும், புராண நிகழ்ச்சிகளையும் கல்லில் வடித்தனர். இந்நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த இந்திய ஓவியரான இராசா இரவிவர்மா அவர்கள் கூட கண்ணன், இலக்குமி, கலைமகள் ஆகிய கடவுளரின் ஓவியங்களைத் தீட்டியே ஓவியக் கலையை வளர்த்தார்.

இதே போன்று மேலை நாட்டுச் சிற்பக்கலையில் ஏசுவின் திருவுருவம் பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. விவிலிய நூலில் கூறப்பட்டுள்ள கதை நிகழ்ச்சிகள் ஓவியக் கலையில் பெரிய புரட்சியை உண்டு பண்ணின. ஏசுவின் திருவுருவத்தை எவ்வெவ்வாறெல்லாம் வடிக்க முடியுமோ அவ்வவ்வாறெல்லாம் வடித்து மேலை நாட்டுச் சிற்பிகள் அழகு பார்த்தனர், இக்கலைச் செல்வங்களையெல்லாம் கத்தோலிக்கர்கள் இக்கோவிலில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். போப்பாண்ட-