பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. வாத்திகன் நகரம்

வாத்திகன் (Vatican) என்ற சொல் கிறித்தவர்களுக்கு ஒரு மந்திரச் சொல். ஓர் இந்து காசி நகரை எவ்வாறு ஒரு புனிதமான இடமாகக் கருதுகின்றானோ, ஓர் இசுலாமியன் மக்காவை எவ்வாறு ஒரு புனிதமான இடமாகக் கருதுகிறானோ, அதுபோல ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறித்தவனும் வாத்திகன் நகரைக் கருதுகிறான். ஓர் இந்து காசி நகரையும், ஓர் இசுலாமியன் மக்கா நகரையும் தன் வாழ்நாளில் ஒரு முறை காணுவதைக் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுவதைப்போல, ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறித்தவனும், தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது வாத்திகன் நகரைக் காண விரும்புகிறான். காரணம், கிறித்தவ சமயத்தின் இரண்டாயிரம் ஆண்டு வளர்ச்சியும், வரலாறும் இவ்வாத்திகன் நகரத்தோடு பிரிக்க முடியாதபடி பின்னிப் படர்ந்து கிடக்கின்றன. போப்பாண்டவரின் தலைமைப் பீடம் இந்நகரமே. உலகிலேயே மிகப் பெரிய கிறித்தவக் கோயிலான புனித பீட்டர் தேவாலயமும், மிகப் பெரிய மாளிகையான போப்பாண்டவர் மாளிகையும் வாத்திகன் நகரில் இருக்கின்றன. உலகில் வாழும் ஐம்பது கோடிக் கத்தோலிக்கரின் உள்ளங்களும் இந்நகரின் எல்லைக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

வாத்திகன் வரலாறு

வாத்திகன் உரோம் நகரின் ஒரு பகுதி. வாத்திகன் என்ற மலையின்மேல் இச்சிறு நகரம் அமைந்-