பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


ளது. இது தொட்டிபோல் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் மூன்று குழாய்கள் அமைந்துள்ளன. ஒரு குழாயில் தண்ணீரும், மற்றொன்றில் வெந்நீரும், பிறிதொன்றில் பன்னீரும் கொட்டுமாம். அரச மகளிர் வேண்டும் நீரில் விருப்பப்படி குளித்து மகிழ்வராம். இவ்விடத்தை நேரில் காணக் கொடுத்து வைத்தவர்கள் உள்ளத்தில், மொகலாயப் பேரரசர்களின் இன்ப வாழ்வும், ஆடம்பர வாழ்வும் தென்படாமல் போகா.

இக் குளிக்கும் கட்டத்திற்கு அருகில் அரச குடும்பத்திற்கென்று அமைக்கப்பட்ட மசூதி உள்ளது. விழாக் காலங்களில் அரசர் பெருமான் அரண்மனைக்கு வெளியில் உள்ள ஜும்மா மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துவார். மற்ற நாட்களில் இம் மசூதியே மன்னர்களின் தொழுகைக்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. இம் மசூதியைக் கட்டியவர் அவுரங்கசேப். இவர் ஒவ்வொரு நாளும் பன்முறை இம் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்துவார்.

இம்மசூதியை அடுத்தாற்போல் அரண்மனைப் பூஞ்சோலைகள் அமைந்துள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கது அயத்பக்சு என்ற பூங்காவாகும். இது மொகலாயர் காலத்திய பூங்காக்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. இப்பூங்காவின் ஒரு பகுதி இன்று படைவீடாகப் பயன்படுகிறது. இப் பூங்காவிற்கு அருகில் மேதாப் பாக் என்ற மற்றொன்றும் உள்ளது'. 'நிலவொளிப் பூங்கா' என்பது இதன் பொருள். நிலவொளியில் மலரக்கூடிய