பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்! ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே? பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள்! சாதிச்சண் டைவளர்க்கத் தக்க இதி காசங்கள்! கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார் தேன் சுரக்கப் பேசி இந்து தேசத்தைத் தின்னுதற்கு வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்! இந்த உளைச் சேற்றை, ஏறாத ஆழத்தை எந்தவிதம் நீங்கிநம்மை எதிர்ப்பார்? - என்று கூறும் ஆங்கிலேயன், இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் தீய சக்திகள் யாவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறான். இந்திய மக்கள் கடைப்பிடித்தொழுகிய தவறான கடவுட் கொள்கையால், அவர்கள் எவ்வெவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என்பதை, சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி, ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச் சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே! என்று அந்த ஆங்கிலேயன் குறிப்பிடுகிறான். தத்துவநூல்கள் மக்களை அறிவுடையவர்களாக ஆக்கி, வாழ்க்கையில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொள்ளச் செய்ய வேண்டும். ஆனால் இந்நாட்டின் வேதாந்த நூல்கள், தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்; போகங்கள் வேண்டாம்; பொருள் வேண்டாம்; - r மற்றுமிந்தப் பாழுலகம் பொய்யே பரமபதம் போ.